» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

காலி மைதானத்தில் ஐபிஎல் விளையாடத் தயார்: ஹர்பஜன் சிங்

செவ்வாய் 7, ஏப்ரல் 2020 12:20:36 PM (IST)தற்போதைய சூழலில் காலி மைதானத்தில் ஐபிஎல் ஆட்டங்களை விளையாடத் தயார் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் 13-ஆவது சீசன் போட்டிகள் ஏப்.15-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் பற்றி ஒரு பேட்டியில் ஹர்பஜன் சிங் கூறியதாவது: ரசிகர்களின் உடல்நலன் மிகவும் முக்கியம். சூழல் ஏற்பட்டால், காலி மைதானத்தில் ஐபிஎல் ஆட்டங்களை விளையாடத் தயார். 

ரசிகர்களின் ஆதரவு விளையாடும்போது கிடைக்காது தான். ஆனால் காலி மைதானத்தில் ஐபிஎல் நடைபெற்றால் குறைந்தபட்சம் அவர்கள் தொலைக்காட்சியிலாவது கிரிக்கெட் ஆட்டங்களைப் பார்ப்பார்கள். வீரர்களின் நலனில் நாம் அக்கறை செலுத்தவேண்டும். கிரிக்கெட் மைதானம், வீரர்கள் தங்கும் விடுதிகள் என அனைத்தும் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்பட வேண்டும். நிலைமை சரியான பிறகுதான் ஐபிஎல் போட்டி நடத்தப்படவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory