» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ரசிகர்களின்றி ஐபில் சாத்தியம்: உலக கோப்பையை நடத்த முடியாது : மேக்ஸ்வெல்

திங்கள் 13, ஏப்ரல் 2020 5:36:53 PM (IST)

ரசிகர்களின்றி ஐபிஎல் நடைபெறலாம். ஆனால் டி-20 உலகக் கோப்பையை அப்படி நடத்த முடியாது என ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் கூறியுள்ளார்.

ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது: கரோனா அச்சுறுத்தலால் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு ரசிகர்களைக் கூட்டுவது கடினமானதாக இருக்கும். காலி மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டியை நடத்த முடியும். ஆனால் ரசிகர்கள் இன்றி டி20 உலகக் கோப்பையை நடத்த முடியும் என நான் நினைக்கவில்லை. ரசிகர்கள் இல்லாமல் உலகக் கோப்பைப் போட்டியை நடத்துவது சிரமமானது. எனவே காலி மைதானத்தில் டி20 உலகக் கோப்பை நடக்காது என்றே நினைக்கிறேன். அனைவருடைய உடல்நலனும் நமக்கு முக்கியம் என்றார்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் 13-ஆவது சீசன் போட்டிகள் ஏப். 15-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை டி20 உலகக் கோப்பை நடைபெறுகிறது. 

இந்தப் போட்டிக்கான தகுதிச்சுற்றில் விளையாடி ஆறு அணிகள் டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளன. இதன்மூலம் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன. தற்போதைய சூழலில், ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைப் போட்டி திட்டமிட்டபடி அதே தேதிகளில் நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. எனினும் அக்டோபருக்குள் கரோனாவின் பாதிப்புகள் குறைந்துவிடும் என்பதால் திட்டமிட்டபடி டி20 உலகக் கோப்பையை நடத்தவே ஐசிசி முயற்சி செய்துவருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory