» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு; பிசிசிஐ அறிவிப்பு

புதன் 15, ஏப்ரல் 2020 5:44:59 PM (IST)



கரோனா அச்சத்தால் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கால வரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 29-ந்தேதி மும்பையில் தொடங்க இருந்தது. கரோனா அச்சத்தால் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக ஐ.பி.எல். போட்டி ஏப்ரல் 15-ந்தேதி வரை (அதாவது இன்று வரை) தள்ளி வைக்கப்பட்டது.  வெளிநாட்டினருக்கான விசா நிறுத்தி வைக்கப்பட்டதால் வெளிநாட்டு வீரர்களும் இந்தியாவுக்கு வந்து விளையாட முடியாது. மத்திய அரசாங்கத்தின் அடுத்த கட்ட நிலைப்பாட்டை பொறுத்து ஐ.பி.எல். கிரிக்கெட்டின் தலைவிதி தீர்மானிக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கூறியிருந்தனர்.

இந்நிலையில் கரோனாவின் தாக்கம் இந்தியாவில் தீவிரமாகி வருவதால் மே 3-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். இதனால் இன்னும் 18 நாட்கள் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், ஐ.பி.எல். அணி உரிமையாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த நிலையில்,  ஐ.பி.எல். போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ஒருவேளை அக்டோபர், நவம்பரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தள்ளிவைக்கப்பட்டால் அந்த சமயத்தில் ஐ.பி.எல். தொடரை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory