» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உலகக்கோப்பை டி20 நடக்கவில்லை என்றால் ஐபிஎல் நடக்கக் கூடாது: ஆலன் பார்டர் ஆவேசம்

சனி 23, மே 2020 11:36:34 AM (IST)

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடக்கவில்லை என்றால் ஐபிஎல் நடக்கக் கூடாது என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: உலகக்கோப்பை டி20 ஐசிசி நிகழ்வு, ஆனால் இந்திய-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் இருதரப்பு தொடர், இதில் ஆஸி.க்கு வருமானம் அதிகம் இதனால் இதனை நடத்தவும் உலகக்கோப்பையை ஒழிக்கவும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா வேலை செய்து வருவதாகத் தெரிகிறது. அப்படி ஒருவேளை உலகக்கோப்பை டி20 நடைபெறாவிட்டால் அந்த காலக்கட்டத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தலாமே என்று பிசிசிஐ நாக்கைச் சப்புக் கொட்டி வருகிறது.

உள்நாட்டு டி20 தொடருக்கு ஏன் முக்கியத்துவம்? உலக டி20தான் நடக்க வேண்டும். எனவே உலகக்கோப்பை டி20 நடக்கவில்லை என்றால் ஐபிஎல் கிரிக்கெட்டும் நடக்கக் கூடாது.நிச்சயம் அப்படி நடந்தால் நான் கேள்வி எழுப்புவேன். இது நிச்சயம் பணத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவமாகும். உலக டி20க்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.அப்படி ஐபிஎல் தொடர் நடந்தால் நிச்சயம் கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் வீரர்களை அனுப்பக் கூடாது, ஒரு எதிர்ப்பாக இதனைச் செய்ய வேண்டும்.  என ஆலன் பார்டர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

போயாமே 26, 2020 - 09:39:00 AM | Posted IP 162.1*****

நடந்தால் என்ன, நடக்காவிட்டால் என்ன? கார்பொரேட் காரனுக்கு கிரிக்கெட் பணம் தான் முக்கியம்.. நம்ம மக்களுக்கு சோறு தான் முக்கியம்...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory