» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இலங்கை, ஜிம்பாப்வே தொடர்கள் ரத்து : பிசிசிஐ அறிவிப்பு

வெள்ளி 12, ஜூன் 2020 5:17:24 PM (IST)

இந்திய அணிக்கு எதிரான இலங்கை, ஜிம்பாப்வே கிரிக்கெட் தொடர்களை பிசிசிஐ ரத்து செய்துள்ளது. 

கரோனா வைரஸ் தொற்றால் மார்ச் மாதத்தில் இருந்து இந்திய கிரிக்கெட் அணி எந்தவித போட்டிகளிலும் கலந்து கொள்ளாமல் உள்ளது. இலங்கையில் கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்ததால் இந்தியாவுடன் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இலங்கை அணி விரும்பியது. இந்தியாவும் இலங்கை வந்து விளையாட சம்மதம் தெரிவித்தது.
 
ஆனால் இந்தியாவில் தற்போது கரோனாவில் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது.  இதனால் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் இலங்கை தொடரை நேற்று ரத்து செய்தது. ஜிம்பாப்வே அணி இந்தியா வந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருந்தது. இந்தத் தொடர் ஆகஸ்ட் 22-ந்தேதி தொடங்குவதாக இருந்தது. தற்போது இந்தத் தொடரையும் பிசிசிஐ ரத்து செய்துள்ளது.பிசிசிஐ முதன்முறையாக இரண்டு தொடர்களை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளது. இந்தத் தகவலை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory