» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

செப்டம்பர் - அக்டோபரில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படலாம்: பிரிஜேஷ் பட்டேல் தகவல்

வெள்ளி 12, ஜூன் 2020 5:25:06 PM (IST)

செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படலாம் என்று ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததையடுத்து மார்ச் 29-ம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் போட்டிகள் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுகின்றன. கிரிக்கெட் போட்டியை விடத் தேசத்தின் பாதுகாப்பும் நலனே முக்கியம் என்பதால் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணிகளின் நிர்வாகத்தினர் இத்தகைய முடிவை எடுத்துள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து ஐபிஎல் போட்டியை தங்கள் நாட்டில் நடத்தலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்தது. இதனிடையே ஐக்கிய அரபு அமீரகம் பிசிசிஐ-க்கு போட்டிகளை நடத்தக் கோரிக்கை விடுத்தது. இது குறித்து நேற்றுமுன்தினம் பேட்டியளித்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ‘‘ஐபிஎல் போட்டிகளை இந்தாண்டு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன என்றும் ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டித் தொடரை நடத்தலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது’’ எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் கூறுகையில் ‘‘செப்டம்பர் - அக்டோபர் மாதம் ஐபிஎல் போட்டிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். ஆனால் அது ஐசிசியின் முடிவில்தான் இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் உலக கோப்பை டி20 தொடரை ஐசிசி நடத்தவில்லை என்றால். அந்தத் தேதிகளை ஐபிஎல் போட்டிகளுக்காகப் பயன்படுத்திக்கொள்வோம். எனவே ஐசிசியின் முடிவுக்காகக் காத்திருக்கிறோம். அதன்பின்புதான் அடுத்தகட்டம் குறித்து யோசிக்க முடியும்’’ என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory