» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பாக். முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடிக்கு கரோனா

சனி 13, ஜூன் 2020 4:06:09 PM (IST)

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடிக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி. கடந்த 1996 முதல் 2018-ம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணிக்காக விளையாடியுள்ளார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் பாகிஸ்தானில் நடைபெறும் லீக் ஆட்டங்களில் அப்ரிடி தொடர்ந்து விளைாயடி வருகிறார். தொண்டு நிறுவனம் நடத்தி வரும் அப்ரிடி கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை தனது அமைப்பு மூலம் அளித்து வருகிறார்.

இந்நிலையில் அப்ரிடிக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால், சிறிது நேரத்தில் அப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில் தான் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தார். அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், "வியாழக்கிழமை முதல் எனக்கு உடல்நிலை சரியில்லை. உடல்வலி கடுமையாக இருந்தது. மருத்துவர்கள் எனக்குப் பரிசோதனை நடத்தியதில் எனக்கு கரோனா இருப்பது உறுதியானது. விரைவாக குணமடைய பிரார்த்தனைகள் அவசியம். இன்ஷா அல்லாஹ்” எனத் தெரிவித்துள்ளார்.

அப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்ததையடுத்து அவரின் ரசிகர்கள் லட்சக்கணக்கானோர் அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தும், பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்து வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அப்ரிடி ஓய்வு பெற்றாலும் அவருக்கான ரசிகர்கள் குறையவில்லை. இம்மாதத் தொடக்கத்தில் முன்னாள் வீரர் தவுபீக் உமருக்கு கரோனா ஏற்பட்டு அவர் அதிலிருந்து குணமடைந்தார். இதுதவிர கராச்சியைச் சேர்ந்த உள்நாட்டு வீரர்கள் ரியாஸ் ஷேக், ஜாபர் சர்பிராஸ் இருவரும் கரோானா தொற்றுக்குப் பலியானார்கள். இரு வீரர்களும் முதல் தரக் கிரிக்கெட் போட்டியில் விளையாடியவர்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory