» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்தியாவின் சிறந்த டெஸ்ட் வீரராக ராகுல் டிராவிட் தேர்வு

புதன் 24, ஜூன் 2020 3:45:52 PM (IST)

கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவின் சிறந்த டெஸ்ட் வீரராக ராகுல் டிராவிடை ரசிகர்கள் தேர்வு செய்துள்ளார்கள்.

இந்திய கிரிக்கெட் அணியில் சிறந்த டெஸ்ட் வீரர் என்கிற கேள்வியை ரசிகர்கள் முன் வைத்தது விஸ்டன் இந்தியா நிறுவனம். இதற்கான இணையத் தேர்தலில் 48% வாக்குகள் பெற்ற சச்சினை விடவும் 52% வாக்குகள் பெற்று சிறந்த டெஸ்ட் வீரராகத் தேர்வாகியுள்ளார் டிராவிட். 

இணையத் தேர்தலில் 11,400 பேர் பங்கேற்றார்கள். இந்தத் தேர்தலில் ஆரம்பக் கட்டத்தில் கவாஸ்கரும் கோலியும் பங்கேற்றார்கள். ஆனால் இறுதிச்சுற்றுக்கு டிராவிடும் சச்சினும் மட்டுமே தேர்வானார்கள். கோலியை வென்று 3-ம் இடம் பெற்றுள்ளார் கவாஸ்கர். 200 டெஸ்டுகள் விளையாடியுள்ள சச்சின், 15921 ரன்களையும் 164 டெஸ்டுகள் விளையாடியுள்ள டிராவிட், 13,288 ரன்களையும் எடுத்துள்ளார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory