» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கரோனா அச்சுறுத்தலுக்கு இடையே 117 நாட்களுக்குப் பின் துவங்கிய சர்வதேச கிரிக்கெட்!!

வியாழன் 9, ஜூலை 2020 11:43:03 AM (IST)

கரோனா அச்சுறுத்தலுக்கு இடையே 117 நாட்களுக்குப் பின் சர்வதேச கிரிக்கெட் துவங்கியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. மழை பெய்ததால் மதிய உணவு இடைவேளை வரை போட்டி தொடங்கவில்லை. மதிய உணவு இடைவேளைக்குப்பின் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியில் ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்படவில்லை. இங்கிலாந்து 3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு ஒரு ரன் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory