» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

2008 சிட்னி டெஸ்டில் இந்தியாவுக்கு எதிராக தவறான தீர்ப்பு அளித்தேன் : ஸ்டீவ் பக்னர் ஒப்புதல்

திங்கள் 20, ஜூலை 2020 4:11:48 PM (IST)

2008 சிட்னி டெஸ்டில் இந்தியாவுக்கு எதிராக 2 தவறான தீர்ப்புகளை அளித்தேன் என நடுவர் ஸ்டீவ் பக்னர் கூறியுள்ளார்.

2008-ல் சிட்னியில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான சர்ச்சைக்குரிய டெஸ்ட் ஆட்டத்தை 122 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலிய அணி. இந்த டெஸ்டில் நடுவர் ஸ்டீவ் பக்னர் செய்த தவறுகளை இந்திய வீரர்களால் மட்டுமல்லாமல் ரசிகர்களாலும் மறக்க முடியாது. 

அதுபற்றி ஒரு பேட்டியில் பக்னர் பேசியதாவது: 2008 சிட்னி டெஸ்டில் நான் இரு தவறுகள் செய்தேன். இந்திய அணி சிறப்பாக விளையாடிய போது என்னுடைய தவறால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் சதமடித்தார். 5-ம் நாளில் நான் செய்த மற்றொரு தவறால் இந்தியா தோற்றிருக்கலாம். 5 நாள்களில் இரு தவறுகள். ஒரு டெஸ்டில் இரு தவறுகள் செய்த முதல் நடுவர் நான் தானா? எனினும் அந்த இரு தவறுகளும் என்னை வேதனையடையச் செய்கின்றன.

தவறுகள் எதனால் நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நான் சாக்குப்போக்கு சொல்லவில்லை. சில நேரங்களில் ஆடுகளத்தில் காற்று வேகமாக அடிக்கும்போது பேட்டின் முனையில் பந்து பட்டால் அந்தச் சப்தம் எங்களுக்குக் கேட்காது. ஆனால் வர்ணனையாளர்கள் ஸ்டம்ப் மைக் மூலமாக அதைக் கேட்க முடியும். இதனால் அந்தச் சப்தத்தை நடுவரால் உணர முடியாது. இது ரசிகர்களுக்குத் தெரியாது என்றார். 2009-ல் ஓய்வு பெற்ற பக்னர், 128 டெஸ்டுகள் மற்றும் 181 ஒருநாள் ஆட்டங்களுக்குக் கள நடுவராகப் பணியாற்றியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory