» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

வெஸ்ட் இன்டீஸை வீழ்த்திய இங்கிலாந்து: ஆல்ரவுண்டர் வரிசையில் பென் ஸ்டோக்ஸ் முதலிடம்!!

செவ்வாய் 21, ஜூலை 2020 5:08:24 PM (IST)

வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், ஐசிசியின் ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதனால் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது மேற்கிந்தியத் தீவுகள் அணி. எனினும் 2-வது டெஸ்டை 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது இங்கிலாந்து அணி. பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் அசத்திய பென் ஸ்டோக்ஸ், ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இதனால் டெஸ்ட் தொடர் 1-1 சமனில் உள்ளது. 3-வது டெஸ்ட், மான்செஸ்டரில் ஜூலை 24 அன்று நடைபெறவுள்ளது.

இந்நிலையில் ஐசிசி வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் தரவரிசையில் ஹோல்டரைப் பின்னுக்குத் தள்ளி உலகின் நெ.1 ஆல்ரவுண்டர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் ஸ்டோக்ஸ். 2006-ல் ஆண்ட்ரூ பிளிண்டாஃப் முதல் இடத்தைப் பிடித்த பிறகு இந்த உயரத்தை அடைந்த இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ் தான். அதேபோல பேட்டிங் தரவரிசையில் 3-வது இடத்துக்கு அவர் முன்னேறியுள்ளார். ஸ்டூவர்ட் பிராட், பந்துவீச்சுத் தரவரிசையில் 10-ம் இடம் பிடித்துள்ளார். மே.இ. தீவுகள் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர், பந்துவீச்சுத் தரவரிசையில் 3-ம் இடமும் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் 2-ம் இடமும் பிடித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory