» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கவில்லை : ஸ்டார்க் உறுதி

செவ்வாய் 4, ஆகஸ்ட் 2020 4:41:58 PM (IST)

"இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதில்லை என்கிற முடிவில் மாற்றமில்லை" என ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் கூறியுள்ளார்.

கடந்த வருட இறுதியில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்திலிருந்து விலகினார் ஸ்டார்க். இந்நிலையில் அடுத்த மாதம் தொடங்கும் ஐபிஎல் போட்டியில் அவர் பங்கேற்பாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், ஐபிஎல் போட்டியிலிருந்து விலக முடிவெடுத்ததிலிருந்து மாறப் போவதில்லை என ஸ்டார்க் கூறியுள்ளார்.

ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது: ஐபிஎல் போட்டியில் பங்கேற்பது அருமையான அனுபவம் என்பது எனக்குத் தெரியும். இப்போது ஐபிஎல் போட்டி வேறு தேதியில் நடைபெற்றாலும் என்னுடைய முடிவில் மாற்றமில்லை. எல்லோரும் ஐபிஎல்-லில் விளையாடும்போது நான் ஓய்வெடுத்து அடுத்து வரும் சர்வதேசப் போட்டிகளுக்குத் தயாராவேன். அடுத்த வருடமும் ஐபிஎல் போட்டி நடைபெறும். அதில் விளையாட வேண்டும் என எனக்குத் தோன்றினாலோ அல்லது நான் பங்கேற்க வேண்டும் என மற்றவர்கள் விரும்பினாலோ என்னுடைய முடிவை மாற்றிக் கொள்வேன். இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கவில்லை. இந்த முடிவை நான் ஏற்கெனவே எடுத்துவிட்டேன் என்றார்.

2015 ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணிக்காக விளையாடினார் ஸ்டார்க். காயம் காரணமாக அடுத்த வருடம் விளையாடவில்லை. 2018-ல் ரூ. 9.60 கோடிக்கு ஏலத்தில் ஸ்டார்க்கைத் தேர்வு செய்தது கொல்கத்தா அணி. ஆனால் காயம் காரணமாக மீண்டும் ஐபிஎல் போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. இந்த வருட ஐபிஎல் போட்டியில் விளையாடவில்லை என ஏலத்துக்கு முன்பே அறிவித்துவிட்டார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory