» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

யுஏஇ-யில் ஐபிஎல் போட்டியை நடத்த மத்திய அரசு அனுமதி: பிசிசிஐ தகவல்

வெள்ளி 7, ஆகஸ்ட் 2020 3:28:05 PM (IST)

ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த கொள்கை ரீதியில் மத்திய அரசு அனுமதியளித்துள்ளதாக பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது.

கரோனா தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் மத்தியில் இருந்து இந்தியாவில் கிரிக்கெட் உள்பட எந்தவொரு விளையாட்டு போட்டியும் நடைபெறவில்லை. அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பை அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் இந்த வருட ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 (சனிக்கிழமை) அன்று தொடங்கி நவம்பர் 10 (செவ்வாய்) அன்று நிறைவடைகிறது. 53 நாள்கள் போட்டி நடைபெறுகிறது. இந்த வருட ஐபிஎல் போட்டி குறித்து விவாதிப்பதற்காக ஐபிஎல் ஆட்சி மன்றக் குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. 

அதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.  ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் அணிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை ஒவ்வொரு அணிக்கும் பிசிசிஐ அனுப்பியுள்ளது.  இந்நிலையில் ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த கொள்கை ரீதியில் மத்திய அரசு அனுமதியளித்துள்ளதாக பிசிசிஐ தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் அனுமதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வருட ஐபிஎல் போட்டியின் அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து

ஆமாப்பாAug 9, 2020 - 03:53:13 PM | Posted IP 108.1*****

போட்டி நடத்தினால் நாடு வளம் பெரும் பல ஏழை மக்களுக்கு சாப்பாடு கிடைக்கும் .. போங்க ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory