» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட் போட்டி : தோனி, சுரேஷ் ரெய்னா ஒரே நாளில் ஓய்வு!

ஞாயிறு 16, ஆகஸ்ட் 2020 12:48:03 PM (IST)

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் தல தோனி அறிவிப்பை தொடர்ந்து சின்ன தல சுரேஷ் ரெய்னா தானும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

சுதந்திர தினமான நேற்றைய தினம் இரவு 7.29 மணிக்கு டோனி ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். அடுத்த சில நிமிடங்களிலேயே இந்திய அணியின் மிடில் வரிசை பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 

இருவரும் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமுக்காக சென்னையில் ஒரே ஓட்டலில் தங்கியுள்ளனர். உங்களுடன் (டோனி) இணைந்து விளையாடிய நாட்கள் அருமையானது. முழு மனதுடன் இந்த பயணத்தில் உங்களது முடிவை (ஓய்வு) பின்பற்றுகிறேன். இந்தியாவுக்காக விளையாடியது மிகப்பெரிய பெருமை. ஜெய் ஹிந்த் என்று ரெய்னா தனது  இன்ஸ்டாகிராம்பக்கத்தில் கூறியுள்ளார்.

33 வயதான சுரேஷ் ரெய்னா உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். 2005-ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகம் ஆனார். கடைசியாக 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் ஆடினார். அதன் பிறகு இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். 226 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 5 சதம் உள்பட 5,615 ரன்கள் சேர்த்துள்ளார். 18 டெஸ்ட் மற்றும் 78 இருபது ஓவர் போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.

சர்வதேச 20 ஓவர் போட்டியில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனைக்குரியவர் ஆவார். சர்வதேச கிரிக்கெட்டை விட்டு விலகினாலும், ஐ.பி.எல்.-ல் தொடர்ந்து விளையாடுவார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory