» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தோனியின் புகழ் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை - முதலமைச்சர் பழனிசாமி புகழாரம்

ஞாயிறு 16, ஆகஸ்ட் 2020 4:39:32 PM (IST)

தோனியின் புகழ் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை என தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார். 

இந்திய கிரிக்கெட் போட்டி விளையாட்டில் ஜாம்பவான் எம்.எஸ். தோனி சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். பலரும் கிரிக்கெட் வீரர் தோனியை பாராட்டியுள்ளனர். தோனியின் புகழ் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்ப்பதாகும் என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தார். அவரது ஓய்வு முடிவுக்கு கிரிக்கெட் வீரர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தோனியின் முடிவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அவரது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் சர்வதேச போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தியவரும், இந்திய நாட்டிற்காக 3 சாம்பியன்ஷிப்களை வென்ற ஒரே கூல் கேப்டன் தோனியின் பெயர் வரலாற்றில் பொறிக்கப்படும் என்றும் தோனியின் புகழ் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்ப்பதாகும் என முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory