» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

துபாய் சென்றுள்ள சிஎஸ்கே அணியினருக்கு கரோனா: திட்டமிட்டபடி ஐபிஎல் நடைபெறுமா?

வெள்ளி 28, ஆகஸ்ட் 2020 5:40:21 PM (IST)

துபாய் சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பதை அணி நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக  அமீரகம் சென்றுள்ள சிஎஸ்கே அணிக்கு கரோனா பரிசோதனை நடைபெற்றது. குழுவாக சென்ற 51 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 5 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. 

வீரர்கள், அணி நிர்வாகிகளுக்கான தனிமைப்படுத்தலை மேலும் ஒரு வாரம் நீட்டித்து ஐபிஎல் நிர்வாக குழு உத்தரவிட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் விளையாட கடந்த 21-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகம்  சென்றது சென்னை அணி. சிஸ்கே அணியினருக்கு கரோனா உறுதியாகி உள்ள நிலையில் ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டப்படி நடைபெறுமா?  என சந்தேகம் எழுந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory