» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐபிஎல் தொடரில் இருந்து சுரேஷ் ரெய்னா விலகல்: சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு

சனி 29, ஆகஸ்ட் 2020 4:36:25 PM (IST)

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து சிஎஸ்கே அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா விலகி உள்ளார்.

கரோனா அச்சம் காரணமாக இந்த ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக அணி வீரர்கள் துபாய் சென்றுள்ளனர். கிரிக்கெட் வீரர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

வரும் 19ம் தேதி போட்டி தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார். அவர் தனது சொந்த காரணங்களுக்காக இந்தியா திரும்பியிருப்பதாக அணியின் சிஇஓ விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
 
சுரேஷ் ரெய்னா தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியா திரும்பியிருப்பதால், ஐபிஎல் சீசனில் அவர் விளையாட மாட்டார் என்றும், இந்த நேரத்தில் சுரேஷ் ரெய்னா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் அணியின் டுவிட்டர் பக்கத்தில் சிஇஓ விஸ்வநாதன் குறிப்பிட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த ஒரு வீரர் உள்ளிட்ட 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், முன்னணி பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா விலகியிருப்பது அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST




Tirunelveli Business Directory