» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

நடுவருக்கு ஆட்ட நாயகன் விருது கொடுத்திருக்க வேண்டும்: சேவாக் கிண்டல்

திங்கள் 21, செப்டம்பர் 2020 12:22:05 PM (IST)"டெல்லி - பஞ்சாப் இடையேயான ஆட்டத்தில் ஒரு ரன்னைக் குறைத்த நடுவருக்கு ஆட்ட நாயகன் விருது" அளித்திருக்க வேண்டும் என சேவாக் கிண்டல் செய்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2-ஆவது லீக் ஆட்டத்தில் சூப்பா் ஓவரில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை வீழ்த்தியது தில்லி கேபிடல்ஸ். ரபாடாவின் அற்புதமான பந்துவீச்சால் இந்த வெற்றி கிடைத்துள்ளது. முதலில் பேட் செய்த தில்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் குவித்தது. பின்னா், ஆடிய பஞ்சாப் அணியும் 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் சோ்க்க ஆட்டம் டையானது.

இதையடுத்து, நடைபெற்ற சூப்பா் ஓவரில் தில்லி அணி வெற்றி பெற்றது. இதையடுத்து வெற்றியைத் தீா்மானிக்க சூப்பா் ஓவரில் இரு அணிகளும் விளையாடின. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணியில் முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்த ராகுல், ரபாடா வீசிய அடுத்த பந்தில் ஆட்டமிழந்தாா். அவரைத் தொடா்ந்து பூரண் ஆட்டமிழந்தாா். இதையடுத்து 3 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த தில்லி அணி 3 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. சூப்பா் ஓவரில் இதுதான் மிகக்குறைவான இலக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தபோது 19-வது ஓவரில் மயங்க் அகர்வாலும் ஜார்டனும் இரு ரன்கள் ஓடி எடுத்தார்கள். ஆனால் ஓடி முடிக்கும்போது கிரீஸை பேட் தொடாததால் ஒரு ரன்னைக் குறைவாக வழங்கினார் நடுவர் நிதின் மேனன். ஆனால் தொலைக்காட்சி ரீபிளேயில் ஜார்டனின் பேட் கிரீஸைத் தொட்டது நன்குத் தெரிந்தது. கடைசியில் ஆட்டம் சமன் ஆனதில் நடுவர் முடிவு பெரிய திருப்புமுனையாக அமைந்துவிட்டது. அந்த இரண்டு ரன்களை அவர் வழங்கியிருந்தால் பஞ்சாப் அணி தில்லியைத் தோற்கடித்திருக்கும்.


நடுவரின் இந்த முடிவுக்கு பல வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். ட்விட்டரில் முன்னாள் வீரர் சேவாக் கூறியதாவது: ஆட்ட நாயகன் விருதுத் தேர்வை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். ஒரு ரன்னைக் குறைத்த நடுவருக்கு ஆட்ட நாயகன் விருது அளித்திருக்க வேண்டும். அதுதான் வித்தியாசப்படுத்திவிட்டது என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory