» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

2016-க்குப்பிறகு ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்கிய ஆர்சிபி

செவ்வாய் 22, செப்டம்பர் 2020 10:21:35 AM (IST)துபாயில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சாஹலின் அபார பந்து வீச்சால் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 10 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆர்சிபி.

துபாயில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் விளையாடிய ஆர்.சி.பி. 163 ரன்கள் அடித்தது. பின்னர் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் 153 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் ஆர்.சி.பி. 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒரு கட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் 32 ரன்களை எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை சந்தித்தது.

இந்த வெற்றியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 2016 சீசனுக்குப் பிறகு முதல் போட்டியில் வெற்றியை ருசித்துள்ளது. ஆர்.சி.பி. அணியின் வெற்றிக்கு இளம் தொடக்க வீரரான தேவ்தத் படிக்கல், ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோரின் பேட்டிங்கும் சாஹல், நவ்தீப் சைனியின் பந்து வீச்சும் முக்கிய காரணமாக அமைந்தது.

இந்த வெற்றி குறித்து அவர் கூறியதாவது: யசுவேந்திர சாஹல் ஆட்டத்தை மாற்றினார். அவர் போட்டியை எங்கள் பக்கம் கொண்டு வந்தார். அவர் மிகவும் திறமையுடன் பந்து வீசினார். விக்கெட்டை நோக்கி நேர்த்தியாக பந்துவீசி ஆட்டத்தின் தன்மையை மாற்றினார். படிக்கல், டிவில்லியர்ஸ், ஆரோன் பிஞ்ச் ஆகியோரது பேட்டிங் சிறப்பாக இருந்தது. தொடக்க ஆட்டத்தில் பெற்ற இந்த வெற்றி நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு கோலி கூறியுள்ளார்.

தோல்வி குறித்து ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் கூறியதாவது:- மிச்சேல் மார்ஷ்க்கு ஏற்பட்ட காயம் ஆட்டத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. சாஹலின் கடைசி ஓவர் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந் தது.நாங்கள் இனி நல்ல நிலையை அடைய வேண்டும். இந்த ஆட்டத்தில் என்ன நடந்தது என்பதை எங்களால் சரி செய்ய முடியாது. ஆனால் அடுத்த ஆட்டத்தில் நாங்கள் மிகவும் கடினமாக போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார். பெங்களூர் அணி 2வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை நாளை மறுநாள் துபாயில் சந்திக்கிறது.ஐதராபாத் அணி அடுத்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்சை 26-ந் தேதி எதிர்கொள்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory