» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சஞ்சு சாம்சனை தோனியுடன் ஒப்பிடவேண்டாம்: கெளதம் கம்பீர் கருத்து

திங்கள் 28, செப்டம்பர் 2020 5:28:40 PM (IST)இளம் வீரர் சஞ்சு சாம்சனை தோனியுடன் ஒப்பிட வேண்டாம் என முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் கூறியுள்ளார்.

ஷார்ஜாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப், 20 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 19.3 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்து வென்றது. இந்த ஆட்டத்தில் 42 பந்துகளில் 4 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களுடன் 85 ரன்கள் எடுத்தர் சஞ்சு சாம்சன். 

சஞ்சு சாம்சனின் 14 வயதில் அவரிடம் நான் சொன்னேன், அடுத்த தோனியாக நீ இருப்பாய் என. இரு அற்புதமான இன்னிங்ஸுக்குப் பிறகு உலகத் தரமான வீரராக உள்ளார் என்றார் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்.இந்நிலையில் சஞ்சு சாம்சனைப் பலரும் தோனியுடன் ஒப்பிடுவதால் ட்விட்டரில் முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் கூறியதாவது: யாருக்கு அடுத்ததாகவும் சஞ்சு சாம்சன் இருக்க வேண்டியதில்லை. இந்திய கிரிக்கெட்டின் சஞ்சு சாம்சனாக அவர் இருப்பார் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory