» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தோனியின் மகளுக்கு பாலியல் மிரட்டல்: எல்லைமீறும் சமூக வலைதளவாசிகள்!

சனி 10, அக்டோபர் 2020 5:27:41 PM (IST)

தோனியின் மகள் ஷிவா தோனிக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டது  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் மொத்தம் ஆறு போட்டிகளில் கலந்து கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் 2ல் மட்டுமே வெற்றி பெற்றது. முதல் போட்டியில் மும்பை அணியிடமும், 5ஆவது போட்டியில் பஞ்சாப்பிடம் மட்டும் வெற்றியை கண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் 2,3,4,6 ஆகிய போட்டிகளில் ராஜஸ்தான், டெல்லி, கொல்கத்தா அணிகளுடன் விளையாடி தோல்வியைச் சந்தித்தது.

இதனால் சிஎஸ்கே ரசிகர்கள், கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். இதனால் அணியின் கேப்டன் தோனியை விமர்சித்தும் வருகின்றனர். கிரிக்கெட் வீரர்கள் பொதுவாக இதுபோன்று  விமர்சனங்களை எதிர்கொள்வது சாதாரணமானது என்றாலும், இம்முறை தோனியின் குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடுக்கும் வகையில் ஒருசிலர் சமூக வலைதளங்களில் கருத்தைப் பதிவிட்டிருப்பது  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளத்தில் யார் வேண்டுமானாலும், எந்த கருத்தை வேண்டுமானாலும் வெளிப்படுத்தலாம் என்ற நிலையில் அண்மைக் காலங்களாகச் சிலர் இதில் எல்லைமீறி கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் தான் தற்போது,  தோனியின் 5 வயது மகள் ஷிவாவுக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.

தோனியின் மனைவி சாக்‌ஷி இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு இதுபோன்ற பாலியல் மிரட்டல் கமெண்டுகள் வந்துள்ளன. ஷிவா தோனியை பாலியல் வன்கொடுமை செய்துவிடுவோம் என்ற வகையில் பதிவிட்டிருக்கின்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.  

நாட்டில் ஏற்கனவே பெண்களுக்கும், பெண்குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதை ஹத்ராஸ் போன்ற சம்பவங்கள் உறுதி படுத்தி வரும் நிலையில், ஷிவாவுக்கு இவ்வாறு மிரட்டல் விடுத்திருப்பது நாட்டு மக்களிடையேயும், தோனியின் ரசிகர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைக்கு மிரட்டல் விடுத்தவர்களைக் கண்டறிந்து அவர்களைக் கைது செய்ய வேண்டும் எனவும் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுபோன்ற  வக்கிரமான செயலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள நடிகையும் அரசியல்வாதியுமான நக்மா, "மிஸ்டர் பி.எம் நாட்டில் என்ன நடக்கிறது.. நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது. ஐபிஎல் போட்டி தோல்விக்காக தோனியின் 5 வயது மகளுக்குப் பாலியல் ரீதியிலான மிரட்டல் விடுப்பது கொடுமையாக இருக்கிறது” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கர்நாடக எம்.எல்.ஏவான சவுமியா ரெட்டியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, "சமூக ஊடக தளங்கள் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கு இது மிகவும் அருவருப்பான எடுத்துக்காட்டு" என்று பதிவிட்டுள்ளார்.அதுபோன்று  ஷிவாவுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தவர்களுக்கு எதிராகக் கொந்தளித்துள்ள தோனி ரசிகர்கள், "இந்த சம்பவத்தைப் புரிந்துகொள்ளும் நாள் அன்று, ஷிவா தயவு செய்து நினைவில்கொள்... லட்சக்கணக்கான சகோதரர்கள் உள்ளனர். அவர்கள் உங்களை எப்போதும் பாதுகாப்பார்கள்.. எப்போது மகிழ்ச்சியாய் இரு” என்று தங்களது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory