» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சிஎஸ்கே வர்ணம், சின்னம் - வீட்டையே மாற்றிய தோனி ரசிகர்!!

செவ்வாய் 13, அக்டோபர் 2020 5:38:26 PM (IST)கடலூர் அருகே வீட்டிற்கு மஞ்சள் வர்ணம் பூசி, தோனி - சென்னை சூப்பர்கிங்ஸ் சின்னத்தை வரைந்து தோனியின் ரசிகர் ஒருவர் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

கிரிக்கெட் மற்றும் சினிமா மீது கொண்டுள்ள அதிக மோகத்தால் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த வீரர்கள், நடிகர்களின் புகைப்படங்கள் மற்றும் பெயர் பொறித்த சட்டைகள், டீ-சர்ட்டுகள் அணிவது வழக்கம். சிலர் தங்களுக்கு பிடித்தவர்களின் பெயர்களை உடலில் பச்சை குத்திக் கொள்வார்கள். ஆனால் தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரருக்காக, ரசிகர் ஒருவர் தனது வீட்டையே வர்ணம் தீட்டி மாற்றியுள்ளதை பார்த்திருக்கிறீர்களா?,ஆம் அது போன்ற ஒரு ருசிகர சம்பவம் கடலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள அரங்கூர் கிராமத்தை சேர்ந்த ரங்கசாமி-விஜயா தம்பதியரின் மகன் கோபிகிருஷ்ணன். இவர் சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் கொண்டுள்ளார். தோனியின் தீவிர ரசிகரான இவர், குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு துபாய் சென்றார். வெளிநாடு சென்றாலும் கிரிக்கெட் மீது இருந்த ஆர்வம் துளிக்கூட குறையவில்லை. கோபிகிருஷ்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பி வந்தார். 

இந்நிலையில் ஐ.பி.எல். தொடர் நடைபெறுவதால், தோனிக்கு புகழ்சேர்க்கும் வகையில் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என நினைத்தார். அதன்படி தனது வீட்டை தோனி கேப்டனாக உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் அணியும் ஆடை நிறத்திலும், அதில் தோனியின் படத்தையும் வரைய முடிவு செய்தார். இதையடுத்து கோபிகிருஷ்ணன், ரூ.1½ லட்சம் செலவில் தனது வீடு முழுவதும் மஞ்சள் நிறத்தில் வர்ணம் பூசி, வீட்டின் முன்புறம் தோனி படமும், பக்கவாட்டில் சென்னை சூப்பர்கிங்ஸ் சிங்க படத்தையும் வரைந்து, ‘ஹோம் ஆப் தோனி’ என எழுதியுள்ளார். கிரிக்கெட் வீரருக்காக தனது வீட்டையே மாற்றியுள்ள ரசிகரையும், அவர் வரைந்துள்ள தோனி மற்றும் சென்னை சூப்பர்கிங்ஸ் சிங்க படத்தையும் சுற்று வட்டார கிராம மக்கள் வந்து பார்த்து விட்டு, கோபிகிருஷ்ணனை பாராட்டி செல்கின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory