» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தோனியின் கோபத்தால் முடிவை மாற்றிக் கொண்ட நடுவர்

புதன் 14, அக்டோபர் 2020 3:48:13 PM (IST)

தோனி கோபமடைந்ததால் வைட் வழங்க இருந்த நடுவர் பிறகு தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டார்.

துபையில் நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஹைதராபாத் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களே அடித்தது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே அணி 6-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்நிலையில் ஹைதரபாத் அணி பேட்டிங் செய்தபோது 19-வது ஓவரை ஷர்துல் தாக்குர் வீசினார். அப்போது ரஷித் கான் பேட்டிங் செய்தார். ஷர்துல் தாக்குர் வீசிய பந்து ஒன்று ஆஃப் சைடில் ஓரமாகச் சென்றது. அதை ரஷித் கானால் அடிக்க முடியவில்லை. உடனே கள நடுவரான பால் ரீஃபில் அதை வைட் என அறிவிப்பதற்காக தனது கைகள் இரண்டையும் விரிக்கத் தொடங்கினார். இதைக் கண்ட தோனி கோபமடைந்து நடுவரைப் பார்த்து ஏதோ சொன்னார். இதைக் கண்ட நடுவர் பிறகு தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டார்.


இதனால் வைட் வழங்கப்படவில்லை. எனினும் இதைக் கண்ட ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர், பவுண்டரி அருகே இருந்தபடி மிகவும் கோபமடைந்தார். தனது அதிருப்தியைத் தெரிவித்தார். இதையடுத்து மறுமுனையில் நடுவரின் அருகில் இருந்த மற்றொரு பேட்ஸ்மேன் ஷபாஸ் நதீம் இதுபற்றி நடுவரிடம் விவாதித்தார். ஆட்ட முடிவில் ஹைதராபாத் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. சென்னைக்கு இது 3-வது வெற்றி. ஹைதராபாத்துக்கு 5-வது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது. .


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory