» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியிலிருந்து தினேஷ் கார்த்திக் விலகல்!

வெள்ளி 16, அக்டோபர் 2020 4:35:51 PM (IST)

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து தினேஷ் கார்த்திக். விலகியுள்ளார்  இங்கிலாந்து கேப்டனான இயன் மார்கன் கேப்டனாகத் தேர்வாகியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி புள்ளிகள் பட்டியலில் 7 ஆட்டங்களில் 4 வெற்றிகளுடன் 4-ம் இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் மும்பையை எதிர்கொள்கிறது. இந்நிலையில் பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக கேகேஆர் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக். இதையடுத்து அணியின் துணை கேப்டனான இயன் மார்கன், கேப்டனாகத் தேர்வாகியுள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற உலகக்கோப்பைப் போட்டியில் மார்கன் தலைமையில் இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது. 

கடந்த வருட இறுதியில் நடைபெற்ற ஏலத்தில் ரூ. 5.25 கோடிக்கு மார்கனைத் தேர்வு செய்தது கேகேஆர் அணி. 7 ஆட்டங்களில் 108 ரன்கள் மட்டும் எடுத்ததால் தினேஷ் கார்த்திக் இந்த முடிவை எடுத்துள்ளார். கேகேஆர் அணியின் தலைமைச் செயல் அதிகாரி வெங்கி மைசூர் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தினேஷ் கார்த்திக்கின் இந்த முடிவில் நாங்கள் ஆச்சர்யமடைந்துள்ளோம். எனினும் அவருடைய முடிவுக்கு நாங்கள் மரியாதை அளிக்கிறோம். அணியை வழிநடத்த மார்கன் ஒப்புக்கொண்டது எங்கள் அதிர்ஷ்டம் என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory