» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

நாலுமாவடியில் கைப்பந்து போட்டி: மோகன் சி. லாசரஸ் துவக்கி வைத்தார்!

திங்கள் 19, அக்டோபர் 2020 10:19:25 AM (IST)நாலுமாவடியில் வரலாற்று ஆராய்ச்சியாளர் எஸ்.டி.நெல்லை நெடுமாறன் 4-வது ஆண்டு நினைவு கைப்பந்து போட்டியை மோகன் சி. லாசரஸ் துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடியில் , என்.டி.ஆர் கிளப் சார்பில் வரலாற்று ஆராய்ச்சியாளர் எஸ்.டி.நெல்லை நெடுமாறன் 4-வது ஆண்டு நினைவு கைப்பந்து போட்டியை இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் ஸ்தாபகர் சகோ மோகன் சி. லாசரஸ் துவக்கி வைத்தார். குரும்பூர் காவல்நிலைய ஆய்வாளர் செ.தாமஸ், சிறப்பு உதவி ஆய்வாளர் ஆறுமுகநயினார், தெச்சணமாற நாடார் சங்க துணைத் தலைவரும், குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவருமான த.முருகேச பாண்டியன், கச்சனாவிளை ஊராட்சி மன்றத் தலைவர் கிங்ஸ்டன், என்.டி.ஆர்.கிளப் துணை தலைவர் சதீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியில் ஏர்வாடி, கொம்புத்துறை, காயல்பட்டணம், நான்குனேரி, தூத்துக்குடி உள்ளிட்ட 50-க்கும்மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.


மக்கள் கருத்து

kumarOct 19, 2020 - 01:27:49 PM | Posted IP 162.1*****

arasu arivuruthalin adipadayil...kai kulukkuthal koodathu, mugakavasam aniyavendum....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory