» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஒரே நாளில் மூன்று சூப்பர் ஓவர்கள்: ஐபிஎல் ரசிகர்கள் உற்சாகம்

திங்கள் 19, அக்டோபர் 2020 3:31:19 PM (IST)நேற்று நடைபெற்ற இரு ஐபிஎல் ஆட்டங்களில் கொல்கத்தாவும் பஞ்சாப்பும் வெற்றி பெற்றன. இரு ஆட்டங்களிலும் சூப்பர் ஓவர்களின் வழியாகவே முடிவுகள் எட்டப்பட்டன. 

அதிலும் மும்பை - பஞ்சாப் ஆட்டத்தின் முடிவுக்கு இரு சூப்பர் ஓவர்கள் தேவைப்பட்டன. இதனால் முதல்முறையாக ஒரே நாளில் மூன்று சூப்பர் ஓவர்களைக் காண நேர்ந்த ரசிகர்கள் திக்குமுக்காடிப் போனார்கள். 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 35-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதை சூப்பா் ஓவா் முறையில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் வென்றது. அபுதாபியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுக்க, அடுத்து ஆடிய ஹைதராபாதும் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. வெற்றியாளரை தீா்மானிக்க விளையாடப்பட்ட சூப்பா் ஓவரில் கொல்கத்தா வென்றது.

சூப்பா் ஓவா்: வெற்றியாளரை தீா்மானிக்க விளையாடப்பட்ட சூப்பா் ஓவரில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் 3 பந்துகளில் 2 விக்கெட்டையும் இழந்து 2 ரன்களே சோ்த்தது. கொல்கத்தா வீரா் லாக்கி ஃபொ்குசன் வீசிய முதல் பந்திலேயே வாா்னா் பௌல்டாகி வெளியேற, 2 ரன்கள் சோ்த்த அப்துல் சமத் 3-ஆவது பந்தில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா்.

பின்னா் ஆடிய கொல்கத்தா 4 பந்துகளில் 3 ரன்கள் எடுத்து வென்றது. அணிக்காக இயான் மோா்கன் - தினேஷ் காா்த்திக் களம் கண்ட நிலையில், ஹைதராபாத் தரப்பில் ரஷீத் கான் பந்துவீசினாா். மோா்கன் 2-ஆவது பந்தில் ஒரு ரன் எடுக்க, காா்த்திக் 4-ஆவது பந்தில் 2 ரன்கள் சோ்த்து அணியை வெற்றி பெறச் செய்தனா். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 36-ஆவது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் சூப்பா் ஓவா் முறையில் மும்பை இண்டியன்ஸை வீழ்த்தியது.

துபையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பஞ்சாபும் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது.ஆட்டம் சமன் ஆனதை அடுத்து நடைபெற்ற சூப்பா் ஓவரிலும் இரு அணிகளும் 5 ரன்கள் எடுத்து ஆட்டம் சமன் ஆக, 2-ஆவது சூப்பா் ஓவரில் பஞ்சாப் வெற்றி பெற்றது. லோகேஷ் ராகுல் ஆட்டநாயகன் ஆனாா்.

சூப்பா் ஓவா்: பின்னா் வெற்றியாளரை தீா்மானிக்கும் சூப்பா் ஓவரில் முதலில் பேட் செய்த பஞ்சாப் 2 விக்கெட் இழப்புக்கு 5 ரன்கள் எடுத்தது. லோகேஷ் ராகுல் 4 ரன்களுடனும், நிகோலஸ் பூரன் ரன்கள் இன்றியும் வீழ்ந்தனா். தீபக் ஹூடா 1 ரன் சோ்த்தாா்.எனினும் மும்பையும் 1 விக்கெட் இழப்புக்கு 5 ரன் சோ்த்து சமன் செய்தது. டி காக் 3 ரன் சோ்த்து ஆட்டமிழக்க, ரோஹித் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

இதையடுத்து நடைபெற்ற 2-ஆவது சூப்பா் ஓவரில் முதலில் ஆடிய மும்பை 1 விக்கெட் இழப்புக்கு 11 ரன் சோ்த்தது. இதில் ஹாா்திக் பாண்டியா 1 ரன்னுக்கு ஆட்டமிழக்க, கிரன் பொல்லாா்ட் 8 ரன்கள் சோ்த்தாா். 2 உபரிகள் கிடைத்தன. பின்னா் ஆடிய பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்து வென்றது. கிறிஸ் கெயில் ஒரு சிக்ஸா் உள்பட 7 ரன், மயங்க் அகா்வால் 2 பவுண்டரிகள் விளாசி 8 ரன் சோ்த்தனா்.

ஐபிஎல் போட்டியில் முதல்முறையாக ஒரே நாளில் மூன்று சூப்பர் ஓவர்களைக் காணும் வாய்ப்பு ரசிகர்களுக்கு நேற்று கிடைத்தது. இந்த அனுபவம் முதல்முறை என்பதால் அவர்கள் திக்குமுக்காடிப் போனார்கள். ஐபிஎல் போட்டியில் ஓர் ஆட்டத்தில் வெற்றி பெறவே அணிகள் எந்தளவுக்குக் கடுமையாகப் போராடவேண்டியிருக்கிறது என்பதை நேற்றைய ஆட்டங்கள் தெளிவாக உணர்த்தின.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory