» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இளம் வீரர்களிடம் உத்வேகம் இல்லை: தோனி விரக்தி

செவ்வாய் 20, அக்டோபர் 2020 8:39:08 AM (IST)சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள இளம் வீரர்களிடம் உத்வேகம் இல்லை என்று கேப்டன் எம்.எஸ்.தோனி விரக்திபட தெரிவித்துள்ளார்.

பதிமூன்றாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் திங்கள் இரவு நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராகப் படுதோல்வி அடைந்த சென்னை அணி, பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை ஏறக்குறைய இழந்துவிட்டது. இந்தப் போட்டிக்குப் பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவின் போது பேசிய தோனி கூறியதாவது: அணியில் அடிக்கடி மாற்றங்களை ஏற்படுத்துவது என்பது நல்லதல்ல. அது வீரர்களிடையே ஒருவித பாதுகாப்பின்மை உணர்வை ஏற்படுத்தும். அப்படியான உணர்வு வீரர்களின் அறையில் இருக்கக் கூடாது. உண்மையை சொல்வதென்றால் இந்த ஆண்டு எங்களுக்குச சரியானதாக அமையவில்லை.

அணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கு போதிய உத்வேகம் இல்லை. அதன் காரணமாகவே அவர்களை போட்டியில் களமிறக்கவில்லை. ஆனால் இனி வரும் ஆட்டங்களில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். போட்டிகளில் அவர்கள் எந்தவித அழுத்தம் இல்லாமல் விளையாடலாம். எல்லா நேரங்களில் நாம் நினைத்தது போலவே நடக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. ஆட்டத்தின் முடிவை வைத்துதான் எங்கே தவறு நடக்கிறது என்பதை கண்டறிய முடியும். போட்டி முடிவுகள் வீரர்களின் மனநிலையை பாதிக்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

ஆசீர். விOct 21, 2020 - 03:57:39 PM | Posted IP 173.2*****

போன வருடமே உங்கள் அணியை முதியோர் அணி என்று கிண்டல் செய்தனர். இந்த ஆண்டு அது உண்மை ஆகிவிட்டது. அரபு நாட்டு வெப்பசூழல், வயது கடந்து விடுவதால் வரும் தசை இறுக்கம். இளம் எலும்புகள் முற்றிவிடுதல் போன்ற காரணங்கள் சென்னை அணியின் மாபெரும் பெலவீனமாகிவிட்டது. அது போக முதல் பாதியில் சென்னை அணிக்கு டாஸ் வெல்லும் வாய்ப்பு சுத்தமாக இல்லாமல் போய்விட்டது. இதனால் முதல் பகுதியில் பவுலிங் பீல்டிங் முடித்து விட்டு பேட்டிங் செய்யவரும்போது தான் வயது கடந்து விட்டது நன்கு தெரிகிறது

RAJANOct 20, 2020 - 11:00:24 AM | Posted IP 162.1*****

sam karan mattum young palayer top seven batting order la sam karan mattum young player

RAJANOct 20, 2020 - 10:58:09 AM | Posted IP 162.1*****

young palayers yaru iruka

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory