» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இளம் வீரர்களிடம் உத்வேகம் இல்லையா? தோனி கருத்துக்கு ஸ்ரீகாந்த் எதிர்ப்பு!!

செவ்வாய் 20, அக்டோபர் 2020 5:16:31 PM (IST)

தோனி சிறந்த வீரர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அவர் கூறுவதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது என ஸ்ரீகாந்த் கூறி உள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தானுக்கு எதிரான நேற்றையப் போட்டியில்  படுதோல்வியை சந்தித்த சென்னை அணி பிளே ஆஃப்-க்கான வாய்ப்பைஏறக்குறைய இழந்துவிட்டது. தோல்வி குறித்து தோனி கூறும் போது அணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கு போதிய உத்வேகம் இல்லை. அதனால்தான் அவர்களை களமிறக்கவில்லை. ஆனால் இனி வரும் ஆட்டங்களில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். அவர்கள் களமிறக்கப்படுவார்கள். இனி வரும் போட்டிகளில் அவர்கள் அழுத்தம் இல்லாமல் விளையாடலாம் என கூறினார்.

அணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கு போதிய உத்வேகம் இல்லை என்ற தோனியின் கருத்துக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். ஸ்ரீகாந்த் இது குறித்து கூறும் போது இளம் வீரர்களிடம் உத்வேகம் இல்லை என டோனி எப்படி கூற முடியும். ஜெகதீஷிடம் இல்லாத உத்வேகத்தையா கேதர் ஜாதாவிடமும், பியூஷ் சாவ்லாவிடமும் பார்த்து விட்டார். தோனி சிறந்த வீரர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அவர் கூறுவதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது என கூறினார்.


மக்கள் கருத்து

ஆசீர். விOct 21, 2020 - 04:01:29 PM | Posted IP 173.2*****

இவன் ஒருத்தன் கவாஸ்கர் ஒருத்தன் ரவி சாஸ்திரி ஒருத்தன் இவனுக எல்லாமே தாங்கள் விளையாடும் போது ஏதோ வெட்டி கிழிச்சமாதிரி பேசுறானுவ. மொதல்ல உங்க ரெகார்ட் ஐ பத்தி பேசுங்கல பார்ப்போம். தோணி வாய்ப்பு கொடுத்த அனைவரும் அவரது நம்பிக்கையை வீணடித்தனர் என்பதே உண்மை. நீ போய் எங்காவது கோவில்ல மணியாட்டு. இன்னொருதடவை கமெண்ட்ரில உக்காந்து நக்கல் பண்ணுன நடக்குறதே வேற. உன்னோட விளக்கெண்ணெய் ரெகார்ட் எல்லாத்தையும் பேசவேண்டி வரும்

makkalOct 21, 2020 - 12:55:57 PM | Posted IP 108.1*****

correct

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory