» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 2 சதங்கள் : ஷிகர் தவான் புதிய சாதனை

புதன் 21, அக்டோபர் 2020 5:35:04 PM (IST)



ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அடுத்தடுத்து இரு சதங்களை விளாசி டெல்லி அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் புதிய சாதனை படைத்துள்ளார்.

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்த ஷிகர் தவான், நேற்று பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்திலும் சதம் அடித்து அசத்தினார்.  இதன்மூலம் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அடுத்தடுத்து இரு சதங்களை விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை ஷிகர் தவான் பெற்றுள்ளார். அதேபோல், ஒரு ஐ.பி.எல். தொடரில் ஒன்றுக்கும் மேற்பட்ட சதம் அடிக்கும் 2-வது இந்திய வீரர் என்ற பெருமையும் ஷிகர் தவான் பெற்றுள்ளார். ஒரு ஐ.பி.எல். தொடரில் 4 சதங்களை விராட் கோலி விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் அவர், கடைசி 4 போட்டிகளில் சிறப்பாக விளையாட அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.  ஷிகர் தவான் முதல் ஆறு ஆட்டங்களில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அதன்பின் கடைசி நான்கு போட்டிகளில் இரண்டு அரைசதம், இரண்டு சதங்கள் (69, 57, 101, 106) என சிறப்பாக விளையாடி 465 ரன்களுடன் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டு பிளிஸ்சிஸ் 375 ரன்களுடன் 4-வது இடத்திலும், விராட் கோலி 347 ரன்களுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST




Tirunelveli Business Directory