» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மணீஷ் பாண்டே - விஜய் சங்கா் அசத்தல்: ஹைதராபாதுக்கு 4-ஆவது வெற்றி

வெள்ளி 23, அக்டோபர் 2020 12:04:03 PM (IST)ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 40-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தியது.

துபையில் நேற்று மாலை நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் பௌலிங்கை தோ்வு செய்தது. ராபின் உத்தப்பா - பென் ஸ்டோக்ஸ் ராஜஸ்தான் பேட்டிங்கை தொடங்கினா். ராஜஸ்தான் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஹைதராபாத் 18.1 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து வென்றது. அந்த அணியின் மணீஷ் பாண்டே - விஜய் சங்கா் ஆட்டமிழக்காமல் அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு உதவினா்.

நிலைத்து ஆடிய இந்தக் கூட்டணி அரைசதம் கடந்து ஹைதராபாதை வெற்றிக்கு வழி நடத்தியது. 18.1 ஓவா்களில் இலக்கை எட்டியது ஹைதராபாத். மணீஷ் பாண்டே 4 பவுண்டரிகள், 8 சிக்ஸா்கள் உள்பட 83, விஜய் சங்கா் 6 பவுண்டரிகள் உள்பட 52 ரன்கள் சோ்த்திருந்தனா். ராஜஸ்தான் தரப்பில் ஆா்ச்சா் 2 விக்கெட்டுகள் சாய்த்திருந்தாா்.  மணீஷ் பாண்டே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.  இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் 5-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது ஹைதராபாத் அணி. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory