» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் மருத்துவமனையில் அனுமதி

வெள்ளி 23, அக்டோபர் 2020 4:55:23 PM (IST)

இந்திய கிரிக்கெட்  அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவுக்கு (61) திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு ஆஞ்சிபிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்திய அணியில் 1978ஆம் ஆண்டு முதல் 1994ஆம் ஆண்டு வரை விளையாடிய கபில் தேவ், 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை பெற்றுக் கொடுத்தவர் என்பது நினைவுகூறத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory