» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சென்னையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை!

சனி 24, அக்டோபர் 2020 12:11:15 PM (IST)சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

13-வது ஐபிஎல் சீசனின் 41-வது ஆட்டத்தில் சென்னை, மும்பை அணிகள் சார்ஜாவில் இன்று (வெள்ளிக்கிழமை) விளையாடின. டாஸ் வென்ற மும்பை கேப்டன் போலார்ட் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உடல்நலக் குறைவு காரணமாக இன்று விளையாடததை அடுத்து போலார்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தொடர் தோல்வியில் இருந்து மீள வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்க வீரர்களாக ருத்துராஜ், டூ பிளஸிஸ் ஜோடி முதல்முறையாக களமிறங்கியது.

முதல் ஓவரிலேயே போல்ட் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாது ருத்துராஜ் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். இரண்டாவது ஓவர் வீசிய பும்ரா, சென்னை அணியின் ராயுடு (2) மற்றும் ஜெகதீசனை (0) அடுத்தடுத்து வெளியேற்றி சென்னை அணிக்கு அதிர்ச்சி அளித்தார். போல்ட் வீசிய 3வது ஓவரிலேயே பிளஸீஸை (1) அவுட்டாகினார். அடுத்து களமிறங்கிய தோனி (16) மற்றும் ஜடேஜா (7) சற்று பொறுமையாக ஆடினாலும் அடுத்தடுத்த ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.

பின் களமிறங்கிய தீபக் (0) மற்றும் தாகூர் (11) விரைவில் விக்கெட்டை இழந்து வெளியேறினார்கள். இறுதி கட்டத்தில் சாம் கர்ரனுடம் தாஹிர் இணைந்து அணியின் ரன்னை சற்று உயர்த்தினார்கள். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்கள் மட்டுமே இருந்தது. அரைசதம் அடித்த சாம் 52 ரன்களுக்கு கடைசி பந்தில் போல்டானார்.  தாஹிர் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை அணியில் அதிகபட்சமாக போல்ட் (4), பும்ரா (2) மற்றும் ராகுல் (2) விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

இதைத்தொடர்ந்து 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற எளிய இலங்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக டி காக் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் சென்னை அணி வீசிய பந்தை நாலாப்புறமும் சிதறடித்தனர். அவர்கள் இருவருமே விக்கெட் இழப்பின்றி 12.2 ஓவர்களில் மும்பை அணியை மிக எளிதாக வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் 37 பந்துகளில் 68 ரன்களைக் குவித்தார். மறுபுறம், டி காக் ஆட்டமிழக்காமல் 37 பந்துகளில் 46 ரன்களைக் குவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory