» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக பெண் நடுவர்!
வியாழன் 7, ஜனவரி 2021 5:37:41 PM (IST)

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்டில் 4-வது நடுவராகப் பணியாற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிளார் போலோசாக், ஆடவர் டெஸ்டில் பணியாற்றும் முதல் பெண் நடுவர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது. முதல் டெஸ்டை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.
இந்நிலையில், 3-வது டெஸ்ட் சிட்னியில் இன்று தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் டிம் பெயின், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். முதல் நாளன்று ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்துள்ளது. சிட்னி டெஸ்டில் 4-வது நடுவராக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிளார் போலோசாக் பணியாற்றுகிறார். இதன்மூலம் ஆடவர் டெஸ்டில் பணியாற்றும் முதல் பெண் நடுவர் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார். கிளேர் போலோசாக் ஏற்கெனவே, ஆடவருக்கான ஒருநாள் ஆட்டத்தில் நியமிக்கப்பட்ட முதல் பெண் கள நடுவர்.
டெஸ்ட்டுக்கான ஐசிசி விதிகளின் படி, போட்டியை நடத்தும் கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் 4-வது நடுவர் நியமிக்கப்படுகிறார். அவர் ஐசிசி நடுவர்களுக்கான சர்வதேச குழுவில் அங்கம் வகிப்பவராக இருப்பார்.
ஆடுகளத்தில் இரு நடுவர் பணியாற்றுவார்கள். மூன்றாவது நடுவர், டிஆர்எஸ் முறையீடுகள், ரன் அவுட், ஸ்டம்பிங் முறையீடுகள் தொடர்பான பணிகளை மேற்கொள்வார். ஆட்டத்துக்கான புதிய பந்தை வழங்குவது, புதிய பெய்ல்ஸ்களை அளிப்பது, கள நடுவர்களுக்கான இளைப்பாறல் பானங்களை எடுத்து வருவது, லைட் மீட்டர்களின் பேட்டரிகளை சரிபார்ப்பது, மதிய உணவு மற்றும் தேநீர் இடைவேளைகளின்போது ஆடுகளத்தை சரிபார்ப்பது போன்றவை 4-ஆவது நடுவரின் பணியாகும். எதிர்பாராத சூழ்நிலைகளில் கள நடுவரின் பொறுப்புக்கு தொலைக்காட்சி நடுவர் செல்லும் பட்சத்தில், அவரது பொறுப்பை 4-ஆவது நடுவர் ஏற்பார். ஆடவர் டெஸ்டில் நடுவராகப் பணியாற்றி வரும் கிளார் போலோசாக்குக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: அஸ்வின், ரோகித் சர்மா முன்னேற்றம்
திங்கள் 1, மார்ச் 2021 12:05:28 PM (IST)

சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் மீது விமா்சனம் எழுவது ஏன்? நாதன் லயன் கேள்வி
திங்கள் 1, மார்ச் 2021 11:10:57 AM (IST)

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு: யூசுப் பதான் அறிவிப்பு
வெள்ளி 26, பிப்ரவரி 2021 5:42:37 PM (IST)

இங்கிலாந்திற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அவார வெற்றி!
வியாழன் 25, பிப்ரவரி 2021 8:48:43 PM (IST)

அக்ஷர் பட்டேல் 6 விக்கெட் : 112 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து அணி
வியாழன் 25, பிப்ரவரி 2021 8:47:16 AM (IST)

ஐ.பி.எல். ஏலத்தில் கிறிஸ் மோரிஸ் புதிய சாதனை: ரூ.16¼ கோடிக்கு வாங்கியது ராஜஸ்தான் அணி
வெள்ளி 19, பிப்ரவரி 2021 10:43:31 AM (IST)
