» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தேசிய கீதம் ஒலித்தபோது அழுதது ஏன்?: சிராஜ் உருக்கம்

வியாழன் 7, ஜனவரி 2021 5:49:15 PM (IST)சிட்னியில் 3-வது டெஸ்ட் தொடங்கும் முன்பு தேசிய கீதம் ஒலித்தபோது தான் அழுததற்கான காரணத்தை இந்திய வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் இந்திய அணி மேற்கொண்டுள்ளது. இன்று 3-வது டெஸ்ட் சிட்னியில் இன்று தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் டிம் பெயின், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். முதல் நாளன்று ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்துள்ளது. டெஸ்ட் ஆட்டம் தொடங்கும் முன்பு இரு அணிகளின் தேசிய கீதமும் ஒலிக்கப்பட்டது.

அப்போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் கண்ணீர் விட்டார். அவரால் அழுகையை அடக்க முடியாமல் போனது. இதனால் உருக்கமான ரசிகர்கள், சிராஜுக்கு ஆதரவாகச் சமூக வலைத் தளங்களில் பதிவுகள் எழுதியுள்ளார்கள். இந்நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிந்த பிறகு சிராஜ் கூறியதாவது: தேசிய கீதம் ஒலித்தபோது எனது தந்தையை நினைத்துக் கொண்டேன். நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று அவர் எப்போதும் ஆசைப்படுவார். இன்று அவர் இருந்திருந்தால் நான் விளையாடுவதைப் பார்த்திருப்பார் என்றார்.

26 வயது சிராஜ் இந்திய அணிக்காக ஒரு ஒருநாள் ஆட்டத்திலும் 3 டி20 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார். ஐபிஎல் போட்டியில் கோலி தலைமையிலான ஆர்சிபி அணிக்கு விளையாடி வருகிறார். சிராஜின் தந்தை முகமது கோஸ் (53), நுரையீரல் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நவம்பர் மாதம் மரணமடைந்தார். அப்போது இந்திய அணியினருடன் ஆஸ்திரேலியாவில் இருந்த சிராஜ், கரோனா அச்சுறுத்தல் மற்றும் ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தப்பட்ட காரணத்தால் இந்தியாவுக்குத் திரும்ப முடியாமல் போனது. இதனால் தந்தையின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory