» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
பும்ரா, சிராஜை இன ரீதியாக இழிவுபடுத்திய ஆஸி. ரசிகர்கள் : இந்திய அணி புகார்
சனி 9, ஜனவரி 2021 5:06:18 PM (IST)
சிட்னி டெஸ்டில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பும்ரா, சிராஜை இன ரீதியாக இழிவுபடுத்திய ரசிகர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது. டெஸ்ட் தொடரில், முதல் டெஸ்டை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 3-வது டெஸ்ட் சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் டிம் பெயின், பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 105.4 ஓவர்களில் 338 ரன்கள் எடுத்தது. இந்திய அணி இன்று மிகவும் சுமாராக விளையாடி, 100.4 ஓவர்கள் விளையாடி, 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 3-ம் நாள் முடிவில் 197 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் 29 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்துள்ளது. இந்நிலையில் 2-வது மற்றும் 3-வது நாள்களில் சிட்னி மைதானத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, சிராஜ் ஆகிய இருவரையும் இன ரீதியாக ரசிகர்கள் சிலர் இழிவுபடுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து 3-ம் நாள் ஆட்டம் முடிவடைந்த பிறகு இந்திய அணி கேப்டன் ரஹானே, அஸ்வின் ஆகிய இருவரும் கள நடுவர்கள் பால் ரீஃபில், பால் வில்சன் ஆகியோரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்கள். மைதானத்தின் பாதுகாவல் அதிகாரிகளிடமும் முறையிடப்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய வீரர்களை இழிவுபடுத்திய ரசிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: அஸ்வின், ரோகித் சர்மா முன்னேற்றம்
திங்கள் 1, மார்ச் 2021 12:05:28 PM (IST)

சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் மீது விமா்சனம் எழுவது ஏன்? நாதன் லயன் கேள்வி
திங்கள் 1, மார்ச் 2021 11:10:57 AM (IST)

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு: யூசுப் பதான் அறிவிப்பு
வெள்ளி 26, பிப்ரவரி 2021 5:42:37 PM (IST)

இங்கிலாந்திற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அவார வெற்றி!
வியாழன் 25, பிப்ரவரி 2021 8:48:43 PM (IST)

அக்ஷர் பட்டேல் 6 விக்கெட் : 112 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து அணி
வியாழன் 25, பிப்ரவரி 2021 8:47:16 AM (IST)

ஐ.பி.எல். ஏலத்தில் கிறிஸ் மோரிஸ் புதிய சாதனை: ரூ.16¼ கோடிக்கு வாங்கியது ராஜஸ்தான் அணி
வெள்ளி 19, பிப்ரவரி 2021 10:43:31 AM (IST)
