» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
புஜாரா, அஸ்வின், ரிஷப் அபாரம்: சிட்னி டெஸ்டை போராடி டிரா செய்தது இந்தியா!!
திங்கள் 11, ஜனவரி 2021 8:23:36 PM (IST)
சிட்னியில் புஜாரா, அஸ்வின், ரிஷப் பந்தின் அபார ஆட்டத்தால் ஆஸிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியை இந்திய அணி போராடி டிரா செய்தது.
ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது. டெஸ்ட் தொடரில், முதல் டெஸ்டை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 3-வது டெஸ்ட் சிட்னியில் நடைபெற்றது.
சிட்னியில் கடந்த 7-ம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 338 ரன்கள் குவித்தது. அணியின் தரப்பில் ஸ்டீவ் ஸ்மித் 131 ரன்கள் விளாச, இந்திய தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா். பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, 244 ரன்கள் எடுத்தது. ஷுப்மன் கில், சேதேஷ்வா் புஜாரா மட்டும் தலா 50 ரன்கள் அடிக்க, ஆஸ்திரேலிய அணியில் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.
முதல் இன்னிங்ஸில் 94 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா 2-ஆவது இன்னிங்ஸில் 87 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் சோ்த்து டிக்ளோ் செய்தது. இந்திய அணிக்கு 407 வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணியின் கடுமையான முயற்சியால் சிட்னி டெஸ்ட் டிரா ஆகியுள்ளது. 5-வது நாளில் ரிஷப் பந்த், புஜாரா, விஹாரி, அஸ்வின் ஆகியோர் சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளித்துள்ளார்கள். ரோஹித் சர்மா 52, புஜாரா 77, ரிஷப் பந்த் 97, அஸ்வின் 39, விஹாரி 23 ரன்கள் எடுத்தார்கள்.
இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 131 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் எடுத்தது. விஹாரி 161 பந்துகளில் 23 ரன்களும் அஸ்வின் 128 பந்துகளில் 39 ரன்களும் எடுத்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்கள். கடைசி வரை விஹாரி, அஸ்வினின் விக்கெட்டை ஆஸ்திரேலிய வீரர்களால் எடுக்க முடியாமல் போனது. இருவரும் 259 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார்கள். இதனால் சிட்னி டெஸ்ட் எதிர்பாராதவிதமாக டிரா ஆனது. கடைசி நாளில் இந்திய அணியினரின் போராட்டத்தை எந்தவொரு கிரிக்கெட் ரசிகராலும் மறக்க முடியாது.
செளரவ் கங்குலி பாராட்டு
சிட்னி டெஸ்ட் டிரா ஆனது பற்றி பிசிசிஐ தலைவரும் முன்னாள் கேப்டனுமான செளரவ் கங்குலி ட்விட்டரில் தெரிவித்ததாவது: கிரிக்கெட் அணியில் புஜாரா, அஸ்வின், ரிஷப் பந்தின் ஆகியோரின் முக்கியத்துவத்தை இப்போது நாம் உணர்ந்திருப்போம் என நம்புகிறோம். தரமான பந்துவீச்சுக்கு எதிராக 3-ம் நிலை வீரராக விளையாடுவது என்பது எப்போதும் அடித்தாடுவதில்லை. கிட்டத்தட்ட 400 டெஸ்ட் விக்கெட்டுகள் என்பது சாதாரணமாகக் கிடைத்துவிடாது. நன்றாகப் போராடினீர்கள் இந்திய அணி. டெஸ்ட் தொடரை வெல்லும் நேரமிது என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: அஸ்வின், ரோகித் சர்மா முன்னேற்றம்
திங்கள் 1, மார்ச் 2021 12:05:28 PM (IST)

சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் மீது விமா்சனம் எழுவது ஏன்? நாதன் லயன் கேள்வி
திங்கள் 1, மார்ச் 2021 11:10:57 AM (IST)

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு: யூசுப் பதான் அறிவிப்பு
வெள்ளி 26, பிப்ரவரி 2021 5:42:37 PM (IST)

இங்கிலாந்திற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அவார வெற்றி!
வியாழன் 25, பிப்ரவரி 2021 8:48:43 PM (IST)

அக்ஷர் பட்டேல் 6 விக்கெட் : 112 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து அணி
வியாழன் 25, பிப்ரவரி 2021 8:47:16 AM (IST)

ஐ.பி.எல். ஏலத்தில் கிறிஸ் மோரிஸ் புதிய சாதனை: ரூ.16¼ கோடிக்கு வாங்கியது ராஜஸ்தான் அணி
வெள்ளி 19, பிப்ரவரி 2021 10:43:31 AM (IST)
