» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டிம் பெய்னின் கேப்டன் பதவிக்கான நாட்கள் எண்ணப்படுகின்றன - கவாஸ்கர் காட்டம்

செவ்வாய் 12, ஜனவரி 2021 12:10:30 PM (IST)

பீல்டிங் அமைப்பது, பந்து வீச்சை மாற்றுவதில் ஆர்வம் காட்டாமல், வார்த்தைப்போரில் ஆர்வம் காட்டு டிம் பெய்ன் கேப்டன் பதவி பறிக்கப்பட்டால் ஆச்சர்யம் இல்லை என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தலைசிறந்த பவுலிங் அட்டாக்கை கொண்ட ஆஸ்திரேலியா அணியால் 131 ஓவர்கள் வீசி இந்திய அணி பேட்ஸ்மேன்களை ஆல்-அவுட் ஆக்க முடியவில்லை. ஆஸ்திரேலியா அணி கேப்டன் டிம் பெய்ன் ரிஷப்  பண்ட்-க்கு இரண்டு கேட்ச்களையும், ஹனுமா விஹாரிக்கு ஒரு கேட்சையும் விட்டார். மேலும், அஸ்வினுடன் வார்த்தைப் போரில் ஈடுபட்டார். இந்த நிலையில் டிம் பெய்ன் கேப்டன் பதவிக்கான நாட்கள் எண்ணப்படுகின்றன என்ற கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில் ‘‘எனக்குத் தெரியாது, நான் ஆஸ்திரேலிய அணியின் தேர்வாளர் அல்ல. ஆனால், டிம் பெய்ன் கேப்டன் பதவிக்கான நாட்கள் எண்ணப்படுகின்றன. சிறந்த பந்து வீச்சு குழுவைக் கொண்ட ஆஸ்திரேலிய அணியால், 130 ஓவர்களுக்கு மேல் இந்திய அணியை பேட்டிங் செய்ய அனுமதி அளித்துள்ளனர். பந்து வீச்சு மாற்றம், பீல்டிங் இடங்களை மாற்றுதல் போன்றவை முடிவுகளை மாற்றும்.

பீல்டிங் அமைத்தல், பந்து வீச்சை மாற்றுதல் ஆகியவற்றை காட்டிலும், டிம் பெய்ன்  பேட்ஸ்மேன்களிடம் பேசுவதிலேயே ஆர்வம் காட்டினார். இந்தத் தொடருக்குப்பின் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பதவி மாற்றப்பட்டால், நான் ஆச்சர்யப்படமாட்டேன்’’ என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory