» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
பிரிஸ்பேன் டெஸ்ட் : நடராஜன், வாஷிங்டன் அறிமுகம் - ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள்!
வெள்ளி 15, ஜனவரி 2021 5:44:22 PM (IST)

இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்துள்ளது.
பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் டெஸ்டில் தமிழக வீரர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகியுள்ளார்கள். இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில், மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்தியா வெற்றி கண்டது. அதைத் தொடர்ந்து சிட்னியில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணி அபாரமாக ஆடி டிரா செய்தது. 4-வது டெஸ்ட் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இன்று தொடங்கியுள்ளது.
காயம் காரணமாக இந்திய அணியில் பும்ரா, அஸ்வின், விஹாரி, ஜடேஜா ஆகியோர் இடம்பெறவில்லை. இதனால் தமிழக வீரர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகியுள்ளார்கள். மயங்க் அகர்வால், ஷர்துல் தாக்குர் ஆகிய இருவரும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்கள். பிரிஸ்பேன் டெஸ்ட்: அனுபவமே இல்லாத பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கிய இந்திய அணி
இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 20 வீரர்களைப் பயன்படுத்தியுள்ளது. வெளிநாட்டுத் தொடரில் வேறு எந்த அணியும் இத்தனை வீரர்களைப் பயன்படுத்தியதில்லை. 2013-14ல் ஆஸ்திரேலியாவில் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி இதற்கு முன்பு 18 வீரர்களைப் பயன்படுத்தியுள்ளது. அதேபோல 1998-99ல் தென் ஆப்பிரிக்காவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 18 வீரர்களைப் பயன்படுத்தியது. இந்த டெஸ்ட் தொடரில் இரு இந்திய வீரர்கள் மட்டுமே நான்கு டெஸ்டுகளையும் விளையாடியுள்ளார்கள். புஜாரா, ரஹானே.
44 நாள்கள் இடைவெளியில் முதல் ஒருநாள் ஆட்டத்தில் அறிமுகமாகி, டெஸ்டிலும் அறிமுகமாகியுள்ளார் நடராஜன். வேறு எந்த இந்திய வீரரும் இவ்வளவு குறைந்த இடைவெளியில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் அறிமுகமானதில்லை. டிசம்பர் 2-ல் கான்பெராவில் ஒருநாள் ஆட்டத்தில் அறிமுகமானார். இரு நாள்கள் கழித்து டி20 ஆட்டத்தில் அறிமுகமானார். இதற்கு குறைந்த நாள்களில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் அறிமுகமானவர் புவனேஷ்வர் குமார். நியூசிலாந்து வீரர் இங்க்ரம் 12 நாள்கள் இடைவெளியில் மூன்று விதமான போட்டிகளிலும் அறிமுகமானார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: அஸ்வின், ரோகித் சர்மா முன்னேற்றம்
திங்கள் 1, மார்ச் 2021 12:05:28 PM (IST)

சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் மீது விமா்சனம் எழுவது ஏன்? நாதன் லயன் கேள்வி
திங்கள் 1, மார்ச் 2021 11:10:57 AM (IST)

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு: யூசுப் பதான் அறிவிப்பு
வெள்ளி 26, பிப்ரவரி 2021 5:42:37 PM (IST)

இங்கிலாந்திற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அவார வெற்றி!
வியாழன் 25, பிப்ரவரி 2021 8:48:43 PM (IST)

அக்ஷர் பட்டேல் 6 விக்கெட் : 112 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து அணி
வியாழன் 25, பிப்ரவரி 2021 8:47:16 AM (IST)

ஐ.பி.எல். ஏலத்தில் கிறிஸ் மோரிஸ் புதிய சாதனை: ரூ.16¼ கோடிக்கு வாங்கியது ராஜஸ்தான் அணி
வெள்ளி 19, பிப்ரவரி 2021 10:43:31 AM (IST)
