» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
தோனியுடன் என்னை ஒப்பிடாதீர்: ரிஷாப் பண்ட்
வெள்ளி 22, ஜனவரி 2021 10:25:16 AM (IST)
தோனி போன்ற ஜாம்பவான்களுடன் தன்னை ஒப்பிட வேண்டாம் என ரிஷாப் பண்ட் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு டெல்லி வந்திறங்கிய இந்திய விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டிடம், உங்களை தோனியுடன் ஒப்பிட்டு பேசுகிறார்களே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு 23 வயதான ரிஷாப் பண்ட் கூறுகையில், ‘தோனி போன்ற மிகச்சிறந்த வீரருடன் என்னை நீங்கள் ஒப்பிட்டு பேசுவது மகிழ்ச்சியாகவும், வியப்பாகவும் இருக்கிறது.
ஆனால் என்னை பொறுத்தவரை, எந்த வீரருடன் என்னை ஒப்பிட விரும்பவில்லை. இந்திய கிரிக்கெட்டில், எனக்குரிய அடையாளத்துடன் நான் நானாகவே இருக்க விரும்புகிறேன். தோனி போன்ற ஜாம்பவான்களுடன் என்னை போன்ற சிறிய வீரர்களை ஒப்பிடுவது நல்ல விஷயம் அல்ல. ஆஸ்திரேலிய தொடரில் நாங்கள் விளையாடிய விதத்தை நினைத்து ஒட்டுமொத்த அணியினரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்’ என்றார். சிட்னி டெஸ்டில் 97 ரன்களும், பிரிஸ்பேன் டெஸ்டில் 89 ரன்களும் விளாசி ரிஷாப் பண்ட் ஹீரோவாக ஜொலித்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அக்ஷர், அஸ்வின் அபாரம்: 205 ரன்களுக்குச் சுருண்ட இங்கிலாந்து அணி!
வியாழன் 4, மார்ச் 2021 5:05:11 PM (IST)

டி-20 போட்டியில் 6 பந்தில் 6 சிக்சர் : போல்லார்ட் சாதனை
வியாழன் 4, மார்ச் 2021 12:15:49 PM (IST)

ஐபிஎல் பற்றிய கருத்து: வருத்தம் தெரிவித்தார் டேல் ஸ்டெய்ன்
புதன் 3, மார்ச் 2021 5:23:28 PM (IST)

கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் ரவி சாஸ்திரி!!
செவ்வாய் 2, மார்ச் 2021 5:47:16 PM (IST)

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: அஸ்வின், ரோகித் சர்மா முன்னேற்றம்
திங்கள் 1, மார்ச் 2021 12:05:28 PM (IST)

சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் மீது விமா்சனம் எழுவது ஏன்? நாதன் லயன் கேள்வி
திங்கள் 1, மார்ச் 2021 11:10:57 AM (IST)
