» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம்?

செவ்வாய் 11, மே 2021 5:27:40 PM (IST)

இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடும் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்தில் ஆகஸ்ட் 4 முதல் தொடங்கும் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது இந்திய அணி. இந்நிலையில் முன்னணி வீரர்கள் இல்லாத இந்திய அணி ஜூலை மாதம் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக கங்குலி தெரிவித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக ஜூன் 2 அன்று இந்திய அணி இங்கிலாந்துக்குச் செல்கிறது. இதனால் ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடுவதற்காக இலங்கைக்குச் செல்லும் இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா, பும்ரா போன்ற முன்னணி வீரர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள். 

இலங்கைச் சுற்றுப்பயணத்தில் ஷிகர் தவன், ஹார்திக் பாண்டியா, கிருணாள் பாண்டியா, தீபக் சஹார், வருண் சக்ரவர்த்தி, பிரித்வி ஷா, விஜய் சங்கர் போன்ற வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஆட்டத்துக்கான சிறப்பு வீரர்கள் தேர்வு செய்யப்படவுள்ளார்கள். ஷிகர் தவனுக்கு கேப்டன் பதவி வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

இந்நிலையில் இலங்கை செல்லும் இந்திய அணிக்கான பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தேர்வு செய்யப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா ஏ, இந்தியா யு-19 அணிகளின் பயிற்சியாளராகவும் நேஷனல் கிரிக்கெட் அகாதமியின் தலைவராகவும் உள்ள ராகுல் டிராவிட் இப்பொறுப்புக்குச் சரியான நபராக இருப்பார் என பிசிசிஐ எண்ணுவதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை இந்தப் பொறுப்பை ராகுல் டிராவிட் ஏற்காவிட்டால் பராஸ் மாம்ப்ரே பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்றும் தெரிகிறது. இலங்கைச் சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணி விரைவில் தேர்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory