» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங் காலமானார்!

வியாழன் 10, ஜூன் 2021 4:45:09 PM (IST)

1998 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங் காலமானார். 

மணிப்பூரைச் சேர்ந்த குத்துச் சண்டை வீரர் டிங்கோ சிங், (வயது 42) 1998 பாங்காங் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றார். கடந்த வருடம் கரோனாவால் பாதிக்கப்பட்ட டிங்கோ சிங் அதிலிருந்து மீண்டு வந்தார். 2018 முதல் கல்லீரல் புற்றுநோய்க்கு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். 

இதன் செலவுக்காக தன்னுடைய வீட்டைக் கடந்த வருடம் விற்கவேண்டிய நிலைமை டிங்கோ சிங்குக்கு ஏற்பட்டது. இந்நிலையில் கல்லீரல் புற்றுநோய் காரணமாக இம்பாலில் இன்று அவர் உயிரிழந்தார். டிங்கோ சிங்குக்கு 1998-ல் அர்ஜூனா விருதும் 2013-ல் பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டன. டிங்கோ சிங்கின் மறைவுக்குச் சமூகவலைத்தளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory