» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
இந்தியா - இலங்கை டி-20, ஒன் டே தொடர்கள்: அட்டவணை வெளியீடு!
வெள்ளி 11, ஜூன் 2021 12:51:10 PM (IST)
இந்தியா - இலங்கை அணிகள் மோதும் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களின் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இந்திய அணி அடுத்த மாதம் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற முன்னணி வீரர்கள் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்பதால், இலங்கைக்கு எதிரான தொடர்களுக்கு ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கையில் இந்திய அணி பங்கேற்கும் ஒருநாள், டி20 தொடர்களுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ஒருநாள் தொடர், ஜூலை 13 அன்று தொடங்கி, ஜூலை 18 அன்று நிறைவுபெறுகிறது. டி20 தொடர் ஜூலை 21 அன்று தொடங்கி, ஜூலை 25 அன்று நிறைவுபெறுகிறது. அனைத்து ஆட்டங்களும் கொழும்பில் நடைபெறவுள்ளன.
ஒருநாள் தொடர்
முதல் ஒருநாள்: ஜூலை 13
2-வது ஒருநாள்: ஜூலை 16
3-வது ஒருநாள்: ஜூலை 18
டி-20 தொடர்
முதல் டி20: ஜூலை 21
2-வது டி20: ஜூலை 23
3-வது டி20: ஜூலை 25
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தோல்விக்கு நானே காரணம் - சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் உருக்கம்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 11:28:56 AM (IST)

சிஎஸ்கே தொடர் தோல்வி: தலைமை மாறுமா? ருதுராஜ் - பிளெமிங் மீது ரசிகர்கள் அருப்தி!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:59:36 PM (IST)

சாம்சனை இப்போதே எடை போடாதீர்கள்! - சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங் ஆதரவு
சனி 4, ஏப்ரல் 2026 11:13:13 AM (IST)

அபிஷேக் சர்மாவுக்கு அபராதம்: ஐபிஎல் ஒழுங்கு நடவடிக்கை ஏன்?
வெள்ளி 3, ஏப்ரல் 2026 12:23:08 PM (IST)

வருண் சக்கரவர்த்தியின் மிஸ்டரி முடிவுக்கு வந்ததா? விமர்சனங்களுக்கு கே.கே.ஆர் பயிற்சியாளர் பதிலடி!
வியாழன் 2, ஏப்ரல் 2026 5:00:44 PM (IST)

தோல்வியால் விரக்தி: மைதானத்திலேயே ரிஷப் பண்டை கடிந்து கொண்ட சஞ்சீவ் கோயங்கா!
வியாழன் 2, ஏப்ரல் 2026 11:08:34 AM (IST)

