» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
இலங்கை தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்: பிசிசிஐ அறிவிப்பு
செவ்வாய் 15, ஜூன் 2021 3:49:28 PM (IST)
இலங்கைச் சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி உறுதிபடுத்தியுள்ளார்.
இந்திய அணி அடுத்த மாதம் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற முன்னணி வீரர்கள் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்பதால், இலங்கைக்கு எதிரான தொடர்களுக்கு ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இலங்கைக்குச் செல்லவுள்ள இந்திய வீரர்கள் அனைவரும் திங்கள் முதல் அடுத்த இரு வாரங்களுக்கு மும்பையில் உள்ள தனியார் விடுதியில் தனிமைப் படுத்தப்பட்டு உள்ளார்கள். இரு வாரங்களுக்குப் பிறகு ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணி ஜூன் 28 அன்று இலங்கைக்குச் செல்லவுள்ளது. அங்கு தனியார் விடுதியில் மேலும் மூன்று நாள்களுக்கு இந்திய வீரர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்படுகிறார்கள். அதன்பிறகு பயிற்சியைத் தொடங்குவார்கள்.
இந்தியா - இலங்கை அணிகள் பங்கேற்கும் ஒருநாள் தொடர், ஜூலை 13 அன்று தொடங்கி, ஜூலை 18 அன்று நிறைவுபெறுகிறது. டி20 தொடர் ஜூலை 21 அன்று தொடங்கி, ஜூலை 25 அன்று நிறைவுபெறுகிறது. அனைத்து ஆட்டங்களும் கொழும்பில் நடைபெறவுள்ளன.
இலங்கைச் சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தேர்வு செய்யப்படுவார் எனத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இத்தகவலை பிசிசிஐ தலைவர் கங்குலி உறுதிபடுத்தியுள்ளார். இலங்கையில் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்படுவார் என கங்குலி ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இதற்கு முன்பு இந்தியா ஏ, இந்தியா யு-19 அணிகளின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பணியாற்றியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐபிஎல் 2026: தொடக்கப் போட்டிகளில் இருந்து விலகும் ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர்கள்!
வெள்ளி 20, மார்ச் 2026 4:17:37 PM (IST)

சிஎஸ்கே-வில் சஞ்சு சாம்சன்: 11-ஆம் எண் ஜெர்சியுடன் களமிறங்குகிறார்!
வியாழன் 19, மார்ச் 2026 5:17:25 PM (IST)

பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்த காவ்யா மாறன்: பிசிசிஐ விளக்கம்!
சனி 14, மார்ச் 2026 11:10:49 AM (IST)

வாழ்த்துப் பதிவில் சஞ்சு சாம்சன் நீக்கம்: சர்ச்சையில் சிக்கிய ஷுப்மன் கில்!
சனி 14, மார்ச் 2026 10:29:35 AM (IST)

பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்த காவ்யா மாறன்: சமூக வலைதளங்களில் எதிர்ப்பு!
வெள்ளி 13, மார்ச் 2026 12:28:11 PM (IST)

ஐபிஎல் 2026: மார்ச் 12-ல் முதற்கட்ட அட்டவணை வெளியீடு!
செவ்வாய் 10, மார்ச் 2026 5:18:07 PM (IST)

