» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
கரோனா பாதிப்பால் இந்திய முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் மரணம் பிரதமர் இரங்கல்!
சனி 19, ஜூன் 2021 11:42:44 AM (IST)
இந்திய முன்னாள் தடகள் வீரர் மில்கா சிங்(91) மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மில்கா சிங், கடந்த மாதம் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொகாலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையில் முன்னேற்றம் காணப்பட்டதை அடுத்து வீட்டுக்கு வந்தவருக்கு திடீரென ஆக்சிஜன் அளவு குறைந்ததை அடுத்து சண்டிகரில் உள்ள மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் கரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். ஆசிய, காமன்வெல்த், தேசிய விளையாட்டு போட்டிகளில் பல தங்கப் பதக்கங்களை வேட்டையாடியவர் மில்கா சிங். இளம் தடகள வீரர்கள் பலருக்கு முன்மாதிரியாக விளங்கியவர். அவரது மறைவுக்கு குடியரசு தலைவர், பிரதமர், விளையாட்டு வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவரது மனைவி நிர்மவா கவுர் கரோனா தொற்று பாதிப்பால் சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

யு19 ஆசியக் கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தான் சாம்பியன்!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:14:48 AM (IST)

டி-20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
சனி 20, டிசம்பர் 2025 8:48:37 PM (IST)

திலக் வர்மா, பாண்டியா அதிரடி : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடரை வென்றது இந்தியா!
சனி 20, டிசம்பர் 2025 11:35:09 AM (IST)

டி20 தரவரிசையில் அதிக புள்ளிகள்: தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி சாதனை!
புதன் 17, டிசம்பர் 2025 3:27:02 PM (IST)

ஐபிஎல் மினி ஏலத்தில் மெகா விலை: கேமரூன் ரூ.25.20 கோடி; பதிரனா ரூ.18 கோடி; லியாம் ரூ.13 கோடி!!
புதன் 17, டிசம்பர் 2025 12:14:19 PM (IST)

உலகக்கோப்பை ஸ்குவாஷ் சாம்பியன்: புதிய வரலாறு படைத்தது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:25:09 PM (IST)

