» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
இரட்டைக் குழந்தைகளுக்குத் தந்தையானார் உசைன் போல்ட்!
செவ்வாய் 22, ஜூன் 2021 4:26:30 PM (IST)

மின்னல் வேக மனிதர் என்று புகழப்படும் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட், இரட்டைக் குழந்தைகளுக்குத் தந்தையாகியுள்ளார்.
ஜமைக்காவைச் சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட், 100 மீ. ஓட்டத்தை 9.58 விநாடிகளில் ஓடி உலக சாதனை செய்தவர். 100 மீ. ஓட்டம், 200 மீ. ஓட்டம், 4x100 தொடர் ஓட்டம் ஆகியவற்றில் உலக சாதனை படைத்து தன்னிகரற்ற தடகள வீரராக உள்ளார். ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் 8 முறை தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
2008, 2012, 2016 என மூன்று ஒலிம்பிக்ஸ் போட்டிகளிலும் 100 மீ. ஓட்டம், 200 மீ. ஓட்டம் ஆகிய இரண்டிலும் தங்கப் பதக்கங்களை வென்று அரிய சாதனையையும் படைத்தவர். 2017 உலக சாம்பியன்ஷிப் போட்டிக்குப் பிறகு ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். உசைன் போல்ட்டின் காதலி காசி பென்னட்டுக்குக் கடந்த வருடம் மே மாதம் பெண் குழந்தை பிறந்தது.
உசைன் போல்ட் - காசி பென்னட் ஆகிய இருவரும் 2014 முதல் காதலித்து வருகிறார்கள். ஒலிம்பியா லைட்னிங் போல்ட் எனப் பெண் குழந்தைக்குப் பெயரிட்டார் உசைன் போல்ட். இந்நிலையில் தற்போது இரட்டை ஆண் குழந்தைகளுக்குத் தந்தையாகியுள்ளார் போல்ட். இம்முறையும் குழந்தைகளுக்கு - தண்டர் போல்ட், செயிண்ட் லியோ என வித்தியாசமான முறையில் பெயரிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

5 பந்தில் 5 விக்கெட்: அயர்லாந்து வீரர் வரலாற்று சாதனை!!
வெள்ளி 11, ஜூலை 2025 11:48:55 AM (IST)

இங்கிலாந்தில் டி -20 வென்று இந்திய மகளிர் அணி அசத்தல்!!
வியாழன் 10, ஜூலை 2025 5:51:43 PM (IST)

இளையோர் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி
புதன் 9, ஜூலை 2025 3:55:33 PM (IST)

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி மோசடி : ஆர்சிபி வீரர் யாஷ் தயாள் மீது இளம்பெண் புகார்
செவ்வாய் 8, ஜூலை 2025 5:51:24 PM (IST)

டிஎன்பிஎல்: திண்டுக்கல் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது திருப்பூர் தமிழன்ஸ்!
திங்கள் 7, ஜூலை 2025 11:02:49 AM (IST)

ஆகாஷ் தீப் 6 விக்கெட் சாய்த்து அபாரம்: இங்கிலாந்தை வீழ்த்தி வரலாறு படைத்தது இந்தியா
திங்கள் 7, ஜூலை 2025 8:53:39 AM (IST)
