» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐ.சி.சி. தரவரிசை : 16 ஆண்டுகளுக்கு பின் மிதாலி ராஜ் மீண்டும் முதலிடம்!

செவ்வாய் 20, ஜூலை 2021 5:11:08 PM (IST)

ஐ.சி.சி. தரவரிசை பட்டியலில் 16 ஆண்டுகளுக்கு பின் மிதாலி ராஜ் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்திய மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அணிக்கான கேப்டன் மிதாலி ராஜ், ஐ.சி.சி. மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். சமீபத்திய வாராந்திர தரவரிசை பட்டியல் வெளியீட்டில், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய 2 அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் கடைசி 3 ஆட்டங்கள் கணக்கில் கொள்ளப்பட்டு தரவரிசை புதுப்பிக்கப்பட்டு உள்ளது.

இதில் பெரிய ஸ்கோரை குவிக்காத வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஸ்டெபானி டெய்லர் (49 மற்றும் 21 ரன்கள்), 30 புள்ளிகளை இழந்து முதலிடத்தில் இருந்து இறங்கியுள்ளார். இதனால், 762 புள்ளிகளை கொண்ட மிதாலி ராஜ்  முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.  அவர் பேட்டிங் தரவரிசையில் முதன்முதலாக 16 ஆண்டுகளுக்கு முன்பு முதலிடம் பிடித்தார். இவர் முதலிடம் பிடிப்பது தற்போது 9வது முறையாகும். வெஸ்ட் இண்டீசின் டெய்லர், கணக்கில் கொள்ளப்பட்ட 3 போட்டிகளில் விக்கெட் எதுவும் கைப்பற்றாத நிலையில், பந்து வீச்சாளர்கள் தரவரிசையிலும் முதல் இடத்தில் இருந்து 3 இடங்கள் இறங்கியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory