» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் : அரை இறுதிக்கு முன்னேறினார் சிந்து!!

வெள்ளி 30, ஜூலை 2021 5:01:58 PM (IST)



டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி  இந்திய வீராங்கனை சிந்து அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார். 

32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் 7-வது நாளான நேற்று பெரும்பாலான போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்க படிக்கட்டை நோக்கி பயணித்து மனநிறைவை அளித்தனர். பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில், உலக சாம்பியனும், தரவரிசையில் 7-வது இடத்தில் இருப்பவருமான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ள மியா பிளிக்பெல்ட்டை (டென்மார்க்) சந்தித்தார்.

41 நிமிடம் நடந்த இந்த மோதலில் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான சிந்து 21-15, 21-13 என்ற நேர்செட்டில் பிளிக்பெல்ட்டை விரட்டியடித்து கால்இறுதிக்குள் கால்பதித்தார். இந்த தொடரில் இதுவரை ஒரு செட்டை இழக்காமல் வீறுநடை போடும் சிந்து கால்இறுதியில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையும், தற்போது 5-வது இடம் வகிப்பவருமான அகானே யமாகுச்சியை (ஜப்பான்) இன்று எதிர்கொண்டார்.  இதில் சிந்து  ஜப்பான் வீராங்கனையை 21-13, 22-20 என்ற கணக்கில் வென்றார், இதன் மூலம் அவர் ஒலிம்பிக் ஒற்றையர் அரையிறுதிக்குள் நுழைந்தார். இதனால் அவருக்கு பதக்கம் உறுதியாகி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory