» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆஸி.யை வீழ்த்தி அரையிறுதிக்குள் முன்னேறியது: புதிய வரலாறு படைத்தது இந்திய ஹாக்கி அணி!

திங்கள் 2, ஆகஸ்ட் 2021 5:23:41 PM (IST)



ஒலிம்பிக்கில் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது.

32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.  இதில் 11வது நாளான இன்று நடந்த பெண்கள் ஹாக்கி போட்டி காலிறுதியில் இந்தியா அணி தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவுடன் மோதியது. முதல் கால் பகுதி (15 நிமிடம்) ஆட்டத்தில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது கால் பகுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகள் அபாரமாக விளையாடினார்கள். ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி குர்ஜித் கவுர் கோல் அடித்தார். இதனால் இந்தியா 1-0 என முன்னிலைப் பெற்றது.

3-வது மற்றும் 4-வது கால் பகுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் கோல் அடிக்க முயற்சி செய்தனர். பல வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைத்தன. ஆனால் ஆஸ்திரேலிய வீராங்கனைகளால் அதை கோலாக மாற்ற முடியவில்லை. இதனால் கடைசி இரண்டு கால் பகுதி ஆட்டங்களில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. ஆகவே இந்தியா 1-0 என ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் அர்ஜெண்டினாவைச் சந்திக்கிறது இந்திய பெண்கள் ஹாக்கி அணி.

ஒட்டுமொத்த தேசத்தையும் ஆனந்த கண்ணீரில் மூழ்கடித்திருக்கிறார்கள் இந்திய ஹாக்கி வீராங்கனைகள். காலிறுதிக்கே போகாது என்று கருதப்பட்ட அணி, இன்று அரையிறுதிக்குள் நுழைந்திருக்கிறது. ஆஸ்திரேலிய பெண்கள் ஹாக்கி அணி 3 முறை சாம்பியன்களாகும். இந்திய அணி கடைசியாக 1980-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது. அதன் பிறகு தொடர்ச்சியாக சறுக்கலை சந்தித்த இந்தியாவுக்கு 41 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அரைஇறுதியில் கால்பதிக்கும் வாய்ப்பு கனிந்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory