» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

நடராஜனுக்கு கரோனா உறுதி: ஐபிஎல் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிப்பு

புதன் 22, செப்டம்பர் 2021 5:12:49 PM (IST)ஐதராபாத் அணியின் நடராஜனுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பாதிப்பால் பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எஞ்சிய ஆட்டங்கள்  ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. இன்று  ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோத உள்ளன. இந்நிலையில்,  ஐதராபாத் அணியின் நடராஜனுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த 6 வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இதனால், இன்றைய ஐபிஎல் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது. இந்த சூழலில், இன்றைய ஐபிஎல் போட்டி திட்டமிட்ட படி நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஐதராபாத் அணியின் எஞ்சிய வீரர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு இல்லை எனவும் ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்தது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsTirunelveli Business Directory