» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

வெங்கடேஷ், திரிபாதி அதிரடி: மும்பையை பந்தாடியது கொல்கத்தா!

வெள்ளி 24, செப்டம்பர் 2021 10:10:40 AM (IST)



வெங்கடேஷ் ஐயர், திரிபாதியின் அதிரடி ஆட்டம், நரேன், வருண் சக்ரவர்த்தி ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சு காரணமாக மும்பை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வீழ்த்தியது.

14-வது ஐபிஎல் சீசனின் 34-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் இயான் மார்கன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி முதல் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது.

156 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி கொல்கத்தா தொடக்க ஆட்டக்காரர்களாக ஷுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர். பவர் பிளே ஓவர்களில் தொடர்ச்சியாக மிரட்டி வரும் டிரென்ட் போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே கில் 1 சிக்ஸரும், வெங்கடேஷ் 1 சிக்ஸரும் பறக்கவிட்டு அதிரடி தொடக்கத்துக்கு விதை போட்டனர். ஆடம் மில்ன் வீசிய 2-வது ஓவரில் வெங்கடேஷ் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகள் விளாசினார். 

தொடர்ச்சியாக இரண்டு ஓவர்களில் கொல்கத்தா மிரட்டியதால் விக்கெட்டுக்காக 3-வது ஓவரில் ஜாஸ்பிரித் பும்ராவை அறிமுகப்படுத்தினார் ரோஹித் சர்மா. விக்கெட் விழுந்ததால், மீண்டும் போல்ட்டை பந்துவீச அழைத்தார் ரோஹித். ஆனால், புதிதாகக் களமிறங்கிய ராகுல் திரிபாதியும் அந்த ஓவரில் பவுண்டரி அடிக்க 5-வது ஓவரிலேயே இடது கை பேட்ஸ்மேன் இருந்தாலும், கிருனால் பாண்டியாவை அறிமுகப்படுத்த வேண்டியக் கட்டாயம் மும்பைக்கு ஏற்பட்டது. இதற்குப் பலனாக பாண்டியா ஓவரில் 3 ரன்கள் மட்டுமே கிடைத்தன. 

மில்ன் வீசிய பவர் பிளேவின் கடைசி ஓவரில் மீண்டும் அதிரடிக்கு மாறியது கொல்கத்தா. அந்த ஓவரில் திரிபாதி அடித்த பவுண்டரி உள்பட மொத்தம் 12 ரன்கள் கிடைத்தன.மீண்டும் பும்ரா வீசிய பந்தில் வெங்கடேஷ் அய்யர் ஆட்டமிழந்தார். எனினும் அவர் அரை சதத்தைக் கடந்து 53 ரன்கள் எடுத்து இலக்கை எட்ட உதவினார். 

அதன் பிறகு வந்த இயான் மார்கன் (7) பும்ரா வீசிய பந்தில் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழக்க  ராகுல் திரிபாதி நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தார்.  பிற்பாதியில் அதிரடியில் இறங்கிய அவர், 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் உள்பட 42 பந்துகளில் 74 ரன்களைக் குவித்தார். இதனால் 15.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து கொல்கத்தா அணி 159 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. மும்பை அணி பந்துவீச்சில் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory